சத்தான தக்காளி ஜூஸ்

இலகுவாக செய்யக்கூடிய சுவையான சத்தான தக்காளி ஜூஸ் செய்யும் முறை ..
தேவையான பொருட்கள் :
தக்காளி – அரை கிலோ.

தண்ணீர் – 2 கப்.

தேன் – தேவைக்கு

லெமன் – தேவைக்கு.

கொத்தமல்லி – சிறிதளவு.

உப்பு – 1 சிட்டிகை.
செய்முறை :
* தக்காளியை நன்றாக கழுவி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* நறுக்கிய தக்காளியை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வடிகட்டி 4 டம்ளர் அளவு எடுத்துக் கொள்ளவும். 
* இத்துடன் 2 கப் தண்ணீர், தேன், லெமன், உப்பு போட்டுக் கலந்து கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
* சுவையான சத்தான தக்காளி ஜூஸ் ரெடி.

Leave a Reply