கோல்டு வின்னர் விளம்பரம் ஒன்னு வருது

கோல்டு வின்னர் விளம்பரம் ஒன்னு வருது கவனிச்சிருக்கீங்களா ?? 

.

D விட்டமின் குறைபாடு  சூரிய ஒளி மூலமா கிடைக்காததால இந்தியாவில் 80% பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறதா ஒரு மெசேஜ் சொல்லிட்டு இத கோல்டு வின்னர் ஆயில் சரி செய்யுது னு மெசேஜோட வியாபாரத்தையும் பண்றான் ..

நாம வெறும் விளம்பரமா பாத்துட்டு போயிடறோம்..

அதுல  சொல்ற மெசேஜ் உண்மையா பொய்யானு தெரில ..

ஆனா உண்மையா இருக்கும் பட்சத்தில்

நிறைய வருத்தப்பட வேண்டிய விசயம் அது ..

.

நம்ம உடல் நீராலானது ..அதே போல காற்று பூமி நெருப்பு னு பஞ்ச சக்தியால தான் இயங்கிட்டு இருக்கு …

.

வீடு முழுதும் டைல்ஸ் மார்பிள்ஸ்…வீதிக்கு வந்தா கான்கிரீட் ரோடு ..அத தாண்டுனா தார் ரோடு ..

கால்ல  சூ , செப்பல்ஸ் ..பூமியிலிருந்து கிடைக்க வேண்டிய எந்த விட்டமினும் கிடைக்கறதில்ல …

எங்க போனாலும் ஏசி ..வெயில் பக்கம் தலைவச்சு கூட படுக்கறதில்ல …

வியர்க்கவும் விடறதில்ல …

.

இந்த ஒரு விட்டமின் குறைபாடால தான் 80% பேர் பாதிக்கப்பட்டு இருக்காங்கனு இல்ல ..

போக போக எல்லா விட்டமின் குறைபாடுனால 100% சதவீதமும் பாதிக்கப்பட போறது உறுதி …

.

குளிர் மழை வெயில் எல்லா சீதோஷ்ண நிலையை தாங்கிக்கற மாதிரி தான் நம்ம வாழ்ற இந்த நிலப்பரப்பு அமையப்பட்டிருக்கு ..

அதே போல தான் நம்ம உடம்பும் அமைக்கப்பட்டிருக்கு ..

.

என்னமோ அப்பவே செத்து போய்டற மாதிரி தான் ஒவ்வொருத்தனும் ஓடி ஒளியறத பாத்தா தோணுது …

.

மனநிம்மதிக்கு வழிபாட்டு தலங்களும் 

அறிவுக்கு பள்ளிகளும் அதிகம் இருக்க வேண்டிய இங்க அதிகமா நாளுக்கு நாள் மருத்துவமனைகள் தான் உருவாகிட்டு இருக்கு ..

.

நீங்க ஓடி ஓடி சம்பாரிக்கறது எல்லாமே முதுமை காலத்துல வச்சு சாபுட உதவாது 

ஆஸ்பத்திரி செலவுகளுக்கு தான் பயன்படும்…

.

.

நாகரீகம்ங்கற பேருல இயற்கை கிட்ட இருந்து எப்போ விலக ஆரம்பிச்சமோ அப்ப இருந்தே மரணம் துரத்த ஆரம்பிச்சிடுச்சு வேகமாக !!

.

.

Leave a Reply