கோதுமை ரவை இட்லி

​சுவையான சத்தான கோதுமை ரவை இட்லி செய்யும் முறை ..?
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை – அரை கப்

கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

புளித்த தயிர் – அரை கப்

எண்ணெய் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

பச்சை மிளகாய் – 1

கொத்தமல்லி – சிறிது

மிளகு – 1/4 டீஸ்பூன்
செய்முறை :
* பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* கோதுமை ரவையையும், கடலைப்பருப்பையும் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறியவுடன் கடலைபருப்பை மிக்ஸியில் போட்டு உப்பு, மிளகு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த கடலைப்பருப்பு மாவு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புளித்த தயிர், கோதுமை ரவை சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து 30 நிமிடம் வரை புளிக்க வைக்கவும்.
* கலந்த மாவை இட்லி குக்கரில் இட்லிகளாக ஊற்றி 8 முதல் 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுத்து கொத்தமல்லி சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.
* சுவையான சத்தான கோதுமை ரவை இட்லி ரெடி.

2 comments

Leave a Reply