கொள்ளு காரப் பொங்கல்

கொழுப்பை கரைக்கும் கொள்ளு காரப் பொங்கல்

கொழுப்பை கரைக்க விரும்புபவர்கள் கொள்ளுவை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளு காரப் பொங்கல் செய்முறையை பார்க்கலாம்.

கொழுப்பை கரைக்கும் கொள்ளு காரப் பொங்கல்
தேவையான பொருட்கள் :

கொள்ளு – 50 கிராம் (8 மணி நேரம் ஊறவைக்கவும்),
பச்சரிசி – 100 கிராம்,
[பாட்டி மசாலா] மஞ்சள்தூள் – சிறிதளவு,
பெருங்காயத்தூள், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க :

நெய் – 2 ஸ்பூன்,
மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்,
இஞ்சி – சிறிதளவு,
பச்சை மிளகாய் – 2,
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு.

செய்முறை :

இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கொள்ளு, அரிசி இரண்டையும் நன்றாக கழுவி தனித்தனியே தளர வேகவிடவும்.

வெந்த கொள்ளு, அரிசியை ஒன்றாக சேர்த்து அதனுடன் உப்பு, [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு மசிக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரனம், இஞ்சி, ப.மிளகாய, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளு கலவையில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

சூப்பரான கொள்ளு காரப் பொங்கல் ரெடி.

Leave a Reply