கேழ்வரகு கூழ்

​#கேழ்வரகு_கூழ்_தரும்_நன்மைகள்!!
கேழ்வரகில் உடலுக்கு நன்மை தரும் அமினோ அமிலங்களும், கால்சியம், இரும்புச்சத்து, நியாசின், தையமின், ரிபோஃப்ளோவின் ஆகியவையும் உள்ளன. 
இதில் உள்ள கால்சியம், நம் எலும்பு, பற்கள் உறுதிக்கு உதவும். 
மோருடன் கலந்து இந்தக் கூழை அருந்தும்போது, உடலைக் குளிர்ச்சியாக்கும்; உடலுக்கு வலுவையும் தரும். 
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு அரு மருந்து. 
அரிசி சாதத்துக்குப் பதிலாக இந்தக் கூழைக் குடித்துவந்தால், விரைவாக எடை குறையும். 
இதில் இருக்கும் நார்ச்சத்து நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். 
எனவே, சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். 
ஆனால், கூழுக்கு பதிலாக களியாகவோ, ரொட்டியாகவோ சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். 
இதயநோய்கள் வராமல் காக்கும். மைக்ரேன் தலைவலியைப் போக்கும். 
அதோடு மனஅழுத்தத்துக்குக் காரணமாகும் பதற்றம், டென்ஷன், மன உளைச்சல், மனச்சோர்வு ஆகியவற்றையும் குறைக்கும். 
#இன்சோம்னியா எனப்படும் தூக்கம் வராத குறைபாட்டை நீக்கும். 

ஹார்மோன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். 
ரத்தச்சோகை உள்ளவர்கள், ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு இது அற்புதமான மருந்து. 
செரிமானத்துக்கு உதவும். 
பாலூட்டும் தாய்மார்கள் இதைக் குடித்துவந்தால், பால் சுரப்பு அதிகரிக்கும். 
கூழாக மட்டுமல்லாமல், கேழ்வரகை தோசை, அடை, கஞ்சி… என விதவிதமாகச் செய்து சாப்பிடலாம். 
#கம்பங்கூழ்_தரும்_நன்மைகள்! 
நார்ச்சத்து, புரோட்டீன், பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து என நம் உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் நிரம்பியது கம்பு. 
எனவே, கம்பங்கூழ் தரும் ஆரோக்கியப் பலன்களும் அபாரமானவை. 
ஆனால், கம்பு செரிமானம் ஆக சற்று நேரம் எடுத்துக்கொள்ளும் அடர்த்தியான தானியம்.

Leave a Reply