கேரட் மில்ஷேக் 

சருமத்திற்கு பொலிவு தரும் கேரட் மில்ஷேக் எப்பிடி செய்வது என்று பார்ப்போமா ..?
தேவையான பொருட்கள் :
கேரட் – 2

பால் – 1 கப் (காய்ச்சி ஆற வைத்தது )

சர்க்கரை – உங்கள் தேவைக்கு 

ஏலக்காய்த்தூள் (அ) வெனிலா எசென்ஸ் – சிறிது 

பாதாம் – தேவைக்கு
செய்முறை :
* கேரட்டை தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
* பாதாமை துருவிக்கொள்ளவும்.
* மிக்சியில் கேரட் துண்டுகள் தண்ணீர், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும். 
* ஜூஸ் வடிகட்டியில் அதை வடிகட்டி கொள்ளவும். பின் இதனுடன் பால், ஏலக்காய் தூள் சேர்த்து மீண்டும் மிக்சியில் அடித்துக் கொள்ளவும்.
* கண்ணாடி கப்பில் கேரட் மில்ஷேக் ஊற்றி அதன் மேல் துருவிய பாதாம், ஐஸ் துண்டுகள் சேர்த்து பருகவும்.

Leave a Reply