குதிரைவாலி

சிறுதானியங்களில் முக்கியமானது குதிரைவாலி. இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.

தமிழகத்தில் திருச்சி, மதுரை, நெல்லை, கடலூர், விருதுநகர் மாவட்டங்களில் சிறுதானியங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

பலன்கள்

குதிரைவாலியில் நார்ச்சத்து அதிகம். மலச்சிக்கலைத் தடுத்து உடலில் கொழுப்பைக் குறைத்துவிடும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மெதுவாக வெளியேறுவதற்கு உதவுகிறது. ரத்தசோகை வராமல் தடுக்கும். இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.

குதிரைவாலி பிரியாணி ரெசிப்பி

300 கிராம் – பீன்ஸ், கேரட், 100 கிராம் – வெங்காயம், தக்காளி, காலிஃபிளவர் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். 4 கப் குதிரைவாலி அரிசியைக் கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு, ஏலக்காய், லவங்கப்பட்டை, வெங்காயம், பூண்டு, இஞ்சி, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், டீஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து, நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். இதில், அரிசியைக் கொட்டிக் கிளறி, ஏழரை கப் தண்ணீர் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினாவைக் கலந்து கிளறி, குக்கரை மூடவும். மூன்று விசில்கள் வந்ததும், குக்கரை இறக்கி நெய் ஊற்றிக் கிளறிப் பரிமாறவும்.

Leave a Reply