கீரை மிளகூட்டல்

கீரையில் அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்துள்ளது. கீரையை வைத்து கீரை மிளகூட்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம். 
தேவையான பொருட்கள் :
முளைக் கீரை – ஒரு சிறிய கட்டு,

சீரகம் – ஒரு டீஸ்பூன்,

துவரம்பருப்பு – ஒரு கப்,

தேங்காய்த் துருவல் – ஒரு சிறிய கப்,

மிளகு – ஒரு டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – 2,

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் – சிறிதளவு,

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
* துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.
* கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
* வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சீரகம், தேங்காய்த் துருவல், மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, ஆறவைத்து மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.
* அரைத்த தேங்காய் விழுது, வேகவைத்த பருப்பு, உப்பு அனைத்தையும் வெந்த கீரையில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
* எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, வாணலியில் ஊற்றிக் கொதிக்கவைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, கீரையுடன் சேர்த்து இறக்கவும்.
* சுவையான சத்தான கீரை மிளகூட்டல் ரெடி.
குறிப்பு: இதனை சூடான சாதத்துடன் சேர்த்து நெய் விட்டு சாப்பிடலாம். இதே முறையில் எல்லா கீரையிலும் தயாரிக்கலாம்.

Leave a Reply