கருப்பட்டி ராகி கூழ்

சுவையான சத்தான கருப்பட்டி ராகி கூழ் செய்யும் முறை
ஆரோக்கியமானதுமான ராகி மாவைக் கொண்டு கூழ் தயாரித்துக் குடித்தால், பசி அடங்கி சுறுசுறுப்பு கிடைப்பதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
தேவையான பொருட்கள் :
ராகி மாவு – 1/2 கப்

கொதிக்க வைத்த பால் – 1 கப்

கருப்பட்டி – தேவையான அளவு

தண்ணீர் – 2 கப்

பாதாம் – சிறிது (நறுக்கியது)

ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
செய்முறை :
* கருப்பட்டியை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, கருப்பட்டி கரைந்ததும் இறக்கி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* மற்றொரு பாத்திரத்தில் ராகி மாவைப் போட்டு, 2 கப் நீரை ஊற்றி கெட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் பால் ஊற்றிக் கிளறி, அடுப்பில் வைத்து, தொடர்ந்து கரண்டி கொண்டு கைவிடாமல் கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
* ராகியானது சற்று கெட்டியானதும், அதனை இறக்கி, அதில் கருப்பட்டி பாகு, ஏலக்காய் பொடி மற்றும் பாதாம் சேர்த்து கிளறினால், சுவையான சத்தான கருப்பட்டி ராகி கூழ் ரெடி!!!

Leave a Reply