உருளைக்கிழங்கு அரிசி மாவு முறுக்கு

உருளைக்கிழங்கு அரிசி மாவு முறுக்கு செய்யும் முறை

தேவையான பொருட்கள் :

அரிசி மாவு – 2 கப்
உருளைக் கிழங்கு – 2 (நடுத்தர அளவு)
சீரகம் – அரை தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – ½ தேக்கரண்டி
பட்டர் – 2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
நீர் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க

செய்முறை :

* உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தோல் உரித்து மிக்சியில் போட்டு சிறிது நீர் சேர்த்து நன்றாக மென்மையான விழுதாக அரைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் சீரகம், எள், உப்பு, பெருங்காயத்தூள், பட்டர், அரைத்த உருளைக்கிழங்கு விழுது சேர்த்து நன்றாக கிளறவும். பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து (முறுக்கு மாவு பதத்தில்) மென்மையாக பிசைந்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முறுக்கு அச்சில் மாவை போட்டு எண்ணெயில் பிழியவும்.

* முறுக்கு பொன்னிறமாக வந்ததும் எடுத்து அதனை எடுத்து காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்து பயன்படுத்தவும்.

* உருளைக்கிழங்கு முறுக்கு ரெடி.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உணவு

Leave a Reply