இஞ்சி

இஞ்சி:-

———

இஞ்சிக் கிழங்குகள் கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. இவை, வியர்வை மற்றும் உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் பசித்தூண்டியாகவும் வாயுவை அகற்றும் மருந்தாகவும் செயல்படும். காசம், கபம், பித்தம், வாதசுரம் ஆகியவற்றையும் போக்கும்.
முற்றிய பசுமையான இஞ்சியின் மேல் தோலைச் சீவி நீக்கவும். பின்னர், சிறு துண்டுகளாக நறுக்கி, சுத்தமான தேனில், இஞ்சித் துண்டுகள் மூழ்கியிருக்குமாறு ஊறவைக்க வேண்டும். நன்கு ஊறிய பின்னர் தினமும் இரண்டு துண்டுகள் வீதம், உணவிற்கு முன்னர் மென்று சாப்பிட வேண்டும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணத்திற்கு இஞ்சிச் சாற்றை தொப்புளைச் சுற்றிப் பற்றுப்போட வேண்டும்.

வயிற்று வலி மற்றும் வயிறு கனமாக இருத்தல் குணமாக இஞ்சிச் சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி சாறுடன் சிறிதளவு தேன் கலந்து, 2 அல்லது 3 நாட்களுக்குத் தினமும் மூன்று வேளைகள் குடிக்க வேண்டும்.
சளியுடன் கூடிய இருமல் கட்டுப்பட, இஞ்சியை இடித்துச் சாறு எடுக்கவும். ஒரு தேக் கரண்டி அளவு சாறுடன், சிறிதளவு தேன் கலந்து, தினமும் மூன்று வேளைகள், 7 நாட்களுக்குப் பருகவும்.

இளமை நிலைத்திருக்க, இஞ்சியைத் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, தேனில் 48 நாட்கள் ஊற வைக்க வேண்டும். தினந்தோறும், காலையில், ஒரு துண்டு வீதம் சாப்பிட்டுவர வேண்டும். நீண்ட நாட்கள் தொடர்ந்து இவ்வாறு செய்து வர, நரை, திரை, மூப்பு அணுகாது. தேகம் அழகுபெறும். மனம் பலப்படும்.
Scientific classification :-

————————–

Kingdom: Plantae

Clade: Angiosperms

Clade: Monocots

Clade: Commelinids

Order: Zingiberales

Family: Zingiberaceae

Genus: Zingiber

Species: Z. officinale
Binomial name:-

—————-

Zingiber officinale

Roscoe 1807[1]

Leave a Reply