இஞ்சிதொக்கு

இஞ்சி வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும். இஞ்சிதொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள் :

அதிக நார் இல்லாத இஞ்சி – 100 கிராம்
புளி – எலுமிச்சை அளவு
வெல்லம் – சிறிது
தனி மிளகாய் தூள் – 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
கடுகு, தனியா, வெந்தயம் – அரை தேக்கரண்டி
கடுகு, சீரகம், நல்லெண்ணெய், பெருங்காயம் – தாளிக்க

செய்முறை :

* இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

* புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

* கடுகு, தனியா, சீரகம், வெந்தயத்தை நன்கு சிவக்க வறுத்து, ஆற வைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

* நல்லெண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும்.

* நன்றாக வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிநீர், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

* நன்கு சுண்டி, எண்ணெய் மேலே வரும் போது பொடித்து வைத்துள்ள பொடி, மேலும் சிறிது பெருங்காயம், வெல்லம் சேர்த்து கிளறவும்.

* பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது நன்கு கிளறி இறக்கி ஆற விடவும்.

* ஆறியதும் கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் வைத்து குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.

Leave a Reply