ஆப்பிள் பேரீச்சம்பழ கீர்

ஆப்பிள் பேரீச்சம்பழ கீர் செய்யும் முறை ..?வீடியோ 
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் – முக்கால் கப் (பொடியாக தோலுடன் நறுக்கியது)

சர்க்கரை – தேவையான அளவு

தண்ணீர் – ஒரு கப்

கொழுப்பு நீக்கிய பால் – ஒரு கப்

சோளமாவு – 2 தேக்கரண்டி

பேரீச்சம்பழம் – கால் கப் பொடியாக நறுக்கியது

இனிப்பூட்டி : 2 தேக்கரண்டி

வால்நட் –  சிறிதளவு
செய்முறை: 
* ஒரு வாணலியில் ஆப்பிளை போட்டு அதில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும். சில நிமிடங்கள் ஆப்பிளை வேகவிடவும்.
* மற்றொரு  பாத்திரத்தில் அரை கப் பாலை ஊற்றிக் காய்ச்சி இறக்கி ஆறவிடவும். அது ஆறியவுடன் அதில் சோளமாவை சேர்த்துக் கரைக்கவும்.
* வழக்கமாக கீர் செய்யும்போது செய்வதைப்போல் பாலை கொதிக்க விட வேண்டியதில்லை. ஒரு கொதி வந்தவுடன் அதில் சோளமாவை சேர்த்துக்கலக்க வேண்டும். கட்டிகள் ஏற்படாமல் நன்றாகக் கிளறவேண்டும்.
* அதில் பேரீச்சம்பழத்தைப் போட்டு நன்றாக கிளறவும். பேரீச்சம்பழத்தை நன்றாகக் கடைந்துவிட்டால் அதன் மணமும் சுவையும் பாலில் கலந்துவிடும். மிதமான சூட்டில் 10 நிமிடங்களுக்கு இடைவிடாது கிளறி இறக்கி விடவும்.
* பின்னர் இதை ஒரு கிண்ணத்தில் எடுத்து ஆப்பிளை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் அதனுடன் வால்நட் துகள்களைத் தூவவும்
இதனை பிரிட்ஜில் வைத்து பரிமாறினால் சுவையான பேரீச்சம்பழம் ஆப்பிள் கீர் தயார்.

Leave a Reply