அரிசி தேங்காய் பாயாசம்

சூப்பரான அரிசி தேங்காய் பாயாசம்

அனைவருக்கும் பாயாசம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று அரிசி, தேங்காய் வைத்து பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சூப்பரான அரிசி தேங்காய் பாயாசம்
தேவையான பொருட்கள் :

துருவிய தேங்காய் – 1/2 கப்
பச்சரிசி – 3 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – 1/2 கப்
காய்ச்சிய பால் – 1/4 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
நெய் – 2 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
முந்திரி – 15
உலர் திராட்சை – 20

செய்முறை :

சூடான நீரில் வெல்லத்தை தட்டிப் போட்டு, லேசாக சூடேற்றி வெல்லம் கரைந்ததும், அதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

அரிசியை நீரில் போட்டு நன்றாக கழுவி, பின்னர் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

அரிசி நன்றாக ஊறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் தேங்காய் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள அரிசி கலவையைப் போட்டு, நெருப்பைக் குறைத்து, கைவிடாமல் நன்கு கிளறி விட வேண்டும்.

கலவையானது ஓரளவு மென்மையாகி கெட்டியானதும், அதில் வெல்லப் பாகு சேர்த்து, 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

பின் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து நன்கு வதக்கி விட்டு, அதனை பாயாசத்துடன் சேர்த்து இறக்கினால் அரிசி தேங்காய் பாயாசம் ரெடி!!!

Leave a Reply