​நம்மை பற்றிய செய்தி

​நம்மை பற்றிய செய்தி

🌺 சலங்கையின் விலை  ஆயிரக்கணக்கில். அதை காலில் தான் அனிய  முடியும்.

குங்குமத்தின் விலை மிகக்குறைவு. அதை நெற்றியில் அலங்கரித்து கொள்வார்கள். இங்கு விலை முக்கியமில்லை. அதி ன் பெருமை தான் முக்கியம். 

🌺 உப்பு போன்ற கடினமான வார்த்தைகளால் நம்மை  திருத்துபவன் உண்மையான நண்பர். சர்க்கரை போன்ற இனிப்பான வார்த்தைகளால் நம்மை  புகழ்பவன் நயவஞ்சகன்.  புழுவுற்ற உப்பும் புழுவுற்றாத இனிப்பும் இவ்வுலகில்  உள்ளதாக  வரலாறு இல்லை. 

🌺 இங்கு கோயில்கள், மசூதிகள், திருத்தங்கள் வேடிக்கையானவை. பணக்காரன் உள்ளே சென்று  பிச்சை  எடுக்குறான். ஏழை வெளியில் நின்று  பிச்சை எடுக்குறான். ஆக ஏதோ ஒரு வகையில் அனைவரும் பிச்சை எடுப்பவர்களே.

🌺 காணாத கடவுளுக்கு   பஞ்சாமிர்தம் படைப்பார்கள். கண்கண்ட  கடவுளுக்கு பழையஞ்சோறும் கிழிந்த துணியும்  கொடுப்பார்கள்.

🌺 மனித பிறவி சிறப்பானதாக தெரியவில்லை. ஏனெனில்  பிறக்கும்போது அழுகை. சாகும்போதும் அழுகை. இடையில் எல்லாம் நாடகம்.

🌺தீங்கு விளைவிக்கும் மது விற்கும் இடத்திற்கு ஓடோடி போவான்.  அமுதமாம் பால் விற்பவர் வீடு வீடாக தெரு தெருவாக சுற்றுகிறான்.

🌺 பால்காரனை பார்த்தால்  தண்ணீர்  ஊற்றுகிறார் என்று  சண்டையிடுவார்கள். தண்ணீரில்  நஞ்சுகளை கலந்து விற்கும் பாணங்களை தலைமீது வைத்து கொண்டாடுகிறார்கள்.

🌺  மாலை போட்ட மாப்பிள்ளைக்கு முன் ஊரேகூடி கொண்டாடும். மாலை போட்ட மாப்பிள்ளையின் பிணம் வந்தால் எல்லோரும் பிணத்திற்கு பின்னால் வருவார்கள்.

🌺 மனிதனின் பிணத்தை  தொட்டால் அல்லது பார்த்தாலே குளிக்கும்  மனிதன்  வாயில்லா ஜீவன் களை பிணமாக்கி வகைவகையா சமைத்து   விழா எடுப்பார்கள்.

🌺 இவ்வளவு  தான் மனிதனின் வாழ்க்கை. இதுக்கெதற்கு கோபம், விரோதம், வீண்பழி, கொலை, கொள்ளை, காழ்புணர்ச்சி. 

🌺 எது நமதோ அது வந்தே தீரும்.  யாராலும்  தடுக்கமுடியாது.  நமதில்லாதது எது செய்தாலும் வராது. யாராலும்  தரவும்  முடியாது.  வாழும் வரை வாழ்க்கை  வாழ்ந்து காட்டுவோம் மற்றவர்களின் இதயத்தில்.

Leave a Reply