​அந்த ஏழு விசயத்துக்காக இந்த ஏழு இடங்களுக்கும் கட்டாயம் போயாகணும் தெரியுமா?

🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚

மனித இனம் தோன்றியதிலிருந்தே தனித்தனியாக வாழ பிடிக்காமல் ஏதோ ஒரு வகையில் கூட்டமாக வாழ்ந்துவந்தது. ஆனாலும் நமக்குள் இருக்கும் ஒரு சில பண்புகள் நம்மை நமக்கே எதிரியாக்கியது.

மனிதர்கள் தங்களுக்குள் எதிரிகளை உருவாக்கிக்கொண்டனர். அவர்கள் வாழ்க்கையையும் தொலைத்தனர். 100 வருடங்கள் வாழ்ந்த மனிதர்கள் தற்போது 60 களிலேயே இறந்துவிடும் நிலைக்கு வந்துவிட்டனர். இதற்கெல்லாம் காரணம் அந்த ஏழு விசயங்கள்தான்.

அந்த ஏழுவிசயங்களுக்காக இந்த ஏழு இடங்களுக்கும் சென்றுவாருங்கள்…

🍚🍚🍛🍛🍜

1) சாப்பாடு :-

 

நீங்கள் ஒரு தீனிப் பண்டாரம் என்றால்.. மன்னித்து விடுங்கள்.. பூஃடி (FOODY) என்றால் நீங்கள் இங்குதான் செல்லவேண்டும்.

நீங்களே போதும் போதும் என்று சொல்லி சலிக்கும் அளவுக்கு அத்தனை வகை உணவுப் பொருட்கள். எல்லாம் பட்ஜெட் விலையில்…..
உயர்களின் அத்தியாவசிய தேவை உணவு. உயிர்வாழ்வதற்கு உணவு தேவை. ஆனால் ஒரு சிலர் சாப்பிடுவதற்காகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அப்படி இஷ்டம் சாப்பிடுவதற்கு…

 

குற்ற உணர்ச்சிக்கு ஆளாகாமல், உங்களுக்கு பிடித்த உணவுப் பொருட்களை சுவையுங்கள். உங்கள் மனம் கவரும் நாவை சுண்டியிழுக்கும் அதிக சுவையுடைய உணவுகள் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் கிடைக்கும்.

திட்டமிடுங்கள்… எத்தனைபேர்.. எத்தனை நாள் என்று முடிவு செய்து பயணப்படுங்கள்…

 

அப்டியே ரிச்சா ஒரு ரிச் லைஃப் வாழ்ந்துட்டு செத்துபோயிடணும் இதுதான் இன்னிக்கு பல பேரோட கனவா இருக்கு.. உழைக்கணும் , கடினப்படனும்னு இருக்குறதெல்லாம் தவிர்த்தாலும், பணக்கார வாழ்க்கை வாழணும்னு ஆசைப்படுபவர்கள்தான் அதிகம்.

 

🎊

2) பேராசை….

 

பேராசை பெருநஷ்டம் என்பதெல்லாம் ஏட்டுப் பழமொழியாகி நிற்க.. கண்கவரும் வண்ணங்கள் புத்தம்புதிய எண்ணங்கள் என்று சொல்லி புதிதிலும் புதிது அரிதிலும் அரிதான பொருள்களை எவ்வளவு செலவானாலும் வாங்கி குவிக்கின்றனர்..

 
நாகலாந்து மாநிலத்திலுள்ள திமாப்பூர் உங்கள் மன ஓட்டங்களை பிரதிபலிக்கும் அனைத்து டிரெண்ட் ஆடை அலங்கார பொருள்களையும் கண்முன்னே வந்து கொட்டுகிறது.

நைக் , அடிடாஸ் , அர்மனி என அனைத்து வகை நிறுவன தயாரிப்புகளையும் அதற்குரிய விலைகளில் தருகிறது.
🎉🎉

3) சோம்பல்:-
நீங்கள் தூங்குவதற்கென சுற்றுலா செல்வீர்களா? என்னது தூங்குவதற்கா? இல்லை இல்லை.. இது சொகுசாக பொழுதை கழிப்பதற்கான சுற்றுலா..
 

தூங்கி தூங்கி விழுபவர்கள் அல்ல.. சுறுசுறுப்பானவர்களுக்கு கூட ஓய்வு தேவை. அதற்கென சிறப்பான இடம்தான், கேரளா.. கேரள மாநிலத்தில் அனைத்து இடங்களுமே சுற்றுலாத் தளங்கள்தான்.

படகு இல்லம், ஏரி இல்லம் என வித்தியாசமான தங்கும் இல்லங்கள் கேரளாவில் உள்ளன. சுற்றுலா சென்று சிறப்பித்து வாருங்களேன்.

 
4) கோபம்:

 

நமக்கு எதிரி என்பவன் வெளியில் இருந்து வருபவனல்ல.. நம்மால் உருவாக்கப்படுபவனே.. அவனை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது நம் கோபம். அதனை நாம் உணரவேண்டுமானால் இந்த இடத்துக்கு செல்லவேண்டும்.

 
கடலின் கோபத்தால் அழிவுற்ற நகரம்.. ஆனால் இப்போதோ சாந்தமான சுற்றுலாத்தளம்.

தனுஷ்கோடி நமக்கு சொல்லவருவது என்ன? கோபப்பட்டால் என்ன ஆகும் என்பதைத்தான்…

 
🎇🎇

5) பொறாமை:
ஒருவரின் வளர்ச்சியைக் கண்டு நாம் பொறாமை கொள்வது என்பது நம்மை நாமே கீழே தள்ளுவதற்கு சமம். உண்மையில் அடுத்தவரின் வளர்ச்சி கண்டு பொறாமை கொள்பவன் வாழ்வில் வெற்றி பெறமுடியாதவனாகிவிடுகிறான்.

பொறாமை கொள்வது நல்ல செயல் அல்ல,… ஆனால் இதே பொறாமை நல்ல விசயத்துக்காகவும் இருக்கலாம். அவனால் முடியும்போது என்னால் முடியாதா என்று நேர்மறையாக எடுத்துக்கொண்டு நம் வாழ்வை பார்க்கும்போது நம் வாழ்வில் வெற்றி பெறுகிறோம்.
உயர்ந்த மலைகளின் மீது டிரெக்கிங் சென்று வாருங்கள். உங்கள் வாழ்வில் தன்னம்பிக்கைகளை வளர்த்தெடுப்பதற்கு மிகச்சிறந்த செயல் மலையேற்றம்தான்.

அதிலும் உத்தரகண்ட் பகுதியில் எண்ணிலடங்கா சாகசங்கள் செய்யும் டிரெக்கிங் பயணங்கள் உள்ளன.

 
🎏🎏

6) பெருமை:

 

நாம் ஒருவரைப் பார்த்து பெருமைபடுவதும், இன்னொருவர் நம்மை பார்த்து பொறாமை கொள்ளும் அளவுக்கு நாம் வருவது வளருவது மிகச்சிறப்பான விசயம்.

அப்படி மட்டுமில்லாமல், நாடே பெருமைபடக்கூடிய வகையில் சிறப்பாக செயல்படுவது என்பது எவ்வளவு பெருமைதரும் விசயம்.

இப்படி நாடே பெருமைபடும் பல இடங்கள் இந்தியாவில் இருந்தாலும் இந்த இடம் சிறப்பானது ஆகும்.
ராஜஸ்தானுக்கு சென்றிருக்கிறீர்களா உண்மையில் நீங்கள் போகவில்லை என்றால் நிச்சயம் போகவேண்டிய இடங்களுள் ஒன்றை இழந்துவிட்டீர்கள் என்றுதான் கூற வேண்டும்.

அருமையான கோட்டைகள், சுற்றுலாத் தளங்கள் நிறைந்து காணப்படும் ஒரு ஊர் இதுவாகும்.

 

🎍🎍

7) இன்பம்:
திருவள்ளுவர் கூட அறம், பொருள் என்று கூறிவிட்டு மூன்றாவதுதான் காமத்தை கூறியுள்ளார். ஆனால் மனிதன் காமத்துக்காக அறத்தையும், பொருளையும் இழந்துவிடக் கூட தயாராக இருக்கிறான்.
இன்பத்துக்கான சரியான இடம் என்றால் நிச்சயமாக கோவாதான். கொண்டாட்டமும் திண்டாட்டமும் அருகருகே கிடைக்கும் இடம்தான் கோவா.. நீங்கள் மாணவபருவத்திலேயே திட்டமிட்டு இன்னும் போகாமல் இருப்பீர்களானால் திருமணத்துக்கு முன் ஒரு சுற்றுலா சென்றுவாருங்கள்.

Leave a Reply