ஷூ பாலிஸ்’ போட சொல்லி அதிகாரிகள் தொந்தரவு- ராணுவ வீரர் குற்றச்சாட்டு

புதுடெல்லி,
ராணுவத்தில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் சிபிஆர்பி படை வீரர்கள் குற்றம் சாட்டிய நிலையில், புதிய குற்றச்சாட்டை ராணுவ வீரர் வெளியிட்டு உள்ளார். ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதன்  காரணமாக உயர் அதிகாரிகள் தனக்கு தொந்தரவு கொடுப்பதாக குற்றம் சாட்டி இந்திய ராணுவ வீரர் நாய்க் யாக்யா பிரதாப் சிங் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார், இது வைரலாக பரவிவருகிறது.
டேராடூனில் 42 காலாட்படை பிரிகேட் பிரிவில் உள்ள பிரதாப் சிங், ராணுவ வீரர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக பிரதமர், பாதுகாப்பு துறை மந்திரி, ஜனாதிபதி மற்றும் சுப்ரீம் கோர்ட்டிற்கு கடந்த வருடம் ஜூன் மாதம் கடிதம் எழுதினேன், இதனையடுத்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து விசாரணை நடத்துமாறு படைப்பிரிவுக்கு உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால் பிரச்சனைகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதற்கு பதிலாக, உயர் அதிகாரிகள் என்னை துன்புறத்த தொடங்கிவிட்டார்கள். விசாரணை தொடங்கப்பட்டது. இதனுடைய முடிவானது ராணுவ நீதிமன்றத்தில் உள்ளது.
பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் எந்தஒரு முக்கிய தகவலையும் கசியவிடவில்லை அல்லது குறிப்பிடவில்லை என்றும் பிரதாப் சிங் குறிப்பிட்டு உள்ளார்.
பிரதமர் மோடிக்கு விண்ணப்பம் விடுத்து இருந்தேன், அதில் ராணுவ வீரர்களை உயர் அதிகாரிகள் ஷூவை பாலிஸ் செய்ய பணிக்க கூடாது என்று கேட்டு இருந்தேன். இது தொடர்பாக விசாரணைக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டது, “இதனையடுத்து ராணுவப் பிரிவு என் மீதான அழுத்தத்தை பிரயோகித்தது மற்றும் என்னை தொல்லை செய்தனர், இந்நிலையானது என்னை தீவிர நடவடிக்கையை மேற்கொள்ள தள்ளியிருக்கலாம். ஆனால் நான் தற்கொலை செய்துக்கொள்ள மாட்டேன், யாருக்கும் எதிராகவும் செயல்பட மாட்டேன், அது என்னுடைய பணியின் மதிப்பை கெடுக்கும்,” என்று பிரதாப் சிங் கூறிஉள்ளார்.
  “எனக்கு ராணுவ நீதிமன்றம் அழைப்பு விடுத்தது, ஆனால் நான் செய்த தவறு என்ன?” என்றும் பிரதாப் சிங் கேள்வி எழுப்பிஉள்ளார்.
இவ்விவகாரத்தை கருத்தில் எடுத்துக் கொள்வதாகவும், விசாரணை நடத்துவதாகவும் ராணுவம் கூறிஉள்ளது. எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் ராணுவத்தில் தரமான மற்றும் போதிய உணவு வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியிருந்தார். இதேபோன்று சிஆர்பிஎப் வீரர் ஒருவர் ராணுவம் மற்றும் துணை ராணுவப்படை இணையாக நடத்தப்படுவது கிடையாது என்று குற்றம் சாட்டிஉள்ளார். இவ்வரிசையில் புதிய குற்றச்சாட்டாக பிரதிப் சிங்கின் வீடியோ வெளியாகி வைரலாகிஉள்ளது சமூக வலைதளத்தில்.

Leave a Reply