விஷூ

விஷு (Vishu, மலையாளம்: വിഷു) தென் இந்தியாவில் கேரளா மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இது பிசு என்ற பெயரில் கர்நாடகாவின் துளுப்பகுதியிலும், தமிழ்நாட்டிலும் கொண்டாடப்படுகிறது. இது மலையாளப் புத்தாண்டைக் குறிக்கும் பண்டிகையாகும். இது மேடம் (ஏப்ரல் – மே) மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. விஷஷு கோள்களின் நிலை கொண்டு இளவேனில் சமதின நாள் ஏற்படும் போது அதாவது கிரிகோரியன் வருடத்தின் படி ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சூரியன் இந்திய சோதிட கணக்கின் படி இராசி மண்டலத்தில், மேஷ இராசி க்குள் நுழைகிறார் (முதலாவது ராசி ).

விஷு என்ற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் “சமம்” என்று பொருள். வருடத்தின் ஓர் சமதின நாளைக் குறிப்பதாலேயே அவ்வாறு அழைக்கப் பெற்றிருக்கலாம். இது அறுவடை பண்டிகையாக கேரளாவில் கொண்டாடப்படுவதால் எல்லா மலையாளிகளுக்கும் இது முக்கியமான பண்டிகையாகக் கருதப்படுகிறது.

இந்நாளில் இவர்களின் தெய்வமாகிய விஷுக்கணி க்கு படையல்கள் அளிக்கப்படுகின்றது. அவர்களது பூஜை அறையில் புனிதமாக, அரிசி, புதிய துணி, வெள்ளரிக்காய், வெற்றிலை, பாக்கு, உலோகக் கண்ணாடி, மஞ்சள் நிற கொன்றை மலர் (காசியா பிஸ்டுலா ), தெய்வீகமான புத்தகங்கள் மற்றும் காசுகளை வெங்கல உருளி யில் வைத்துப் படைக்கின்றனர். வெண்கல நிலா விளக்கை யும் ஏற்றி அருகே வைத்திருப்பர். இவ்வெல்லாவற்றையும் முதல் நாளே ஏற்பாடு செய்து வைத்து விடுவர். விஷூ அன்று விடியற்காலையில் எழுந்து கண்களை திறக்காமல் நேரே பூஜை அறைக்குச் சென்று விஷூக்கனியின் முன்னரே விழிக்கின்றனர். இந்நாள் இவர்களின் புத்தாண்டின் துவக்கமாகையால் புனித புத்தகமாகிய இராமாயணத்தின் பகுதிகளை விஷூக்கனியைக் கண்டபின் படித்து மகிழ்வர். சிலர் இராமாயணத்தின் எப்பக்கத்தை அவர்கள் திறந்து படிக்கிறார்களோ அது அவர்களின் புத்தாண்டின் தன்மையை ஒத்திருக்கும் என நம்புகின்றனர். அன்றைய தினம் பக்தர்கள் காலையில் சபரிமலை ஐயப்பன், குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிய கோயில்களை அடைந்து “விஷூக்கனி காழ்சா” என்ற அவரின் காட்சியை தரிசிக்க முனைகின்றனர்.

 

கணிக் கொன்றை (காசியா பிஸ்டுலா), விஷூக்கனியின் போது பயன்படுத்தும் மிகப் பிரபலமான கேரள மாநில பூ

விஷு அன்று விருந்தும் அளிக்கப்படுகின்றது, இதில் அனைத்து ருசிகளும் அதாவது உப்பு, இனிப்பு, புளிப்பு மற்றும் கசப்புகளும் சம அளவில் இருக்குமாறு சமைக்கின்றனர். விருந்தில் வேப்பம்பூ ரசமும் (கசப்பான வேப்பமரப் பூ) மாம்பழ பச்சடி யும் (புளிப்பான மாம்பழச் சாறு) பரிமாறப்படுகின்றன.

பாரம்பரியம்

மலையாளத்தில் “கணி” என்பதற்கு “முதலில் காண்பது” என்ற பொருளாகும், “விஷுக்கணி” என்றால் விஷூ அன்று முதலில் காண்பது என்று பொருள்படும்.

விஷூவின் முன் தினமே அந்த இல்லத்தரசி உன்னதமான பொருட்களாகிய பூ, பழம், காய், துணி மற்றும் தங்க நாணயம் ஆகியவற்றை பூஜை அறையில் வைத்து விடுவார்.

இந்திய சோதிட சாத்திரத்தின் படி காலத்தின் கடவுளாக கால தேவர்களின் தலைவனாக விஷ்ணு கருதப்படுகிறார். விஷூ இக்காலங்களின் ஆரம்பமாக விளங்குவதால் இத்தேவர்களுக்கு பூஜை செய்வது முக்கியமாகக் கருதப்படுகிறது.

பொதுவாக இந்த ‘கணி ‘ என்கிற முதற்பார்வைக்கான ஏற்பாடுகள் செய்வது குடும்பத்தின் முதிய பெண்மணி மேல் விழுகின்றது. பாரம்பரிய கணி ஏற்பாடுகள் இங்கே அளிக்கப்பட்டுள்ளது. இது இடத்திற்கேற்றாற் போல் சிற்சில மாற்றங்களுடன் பின்பற்றப்படுகின்றது.

இந்த விஷுக்கணி யை சரியாகப் பெறாவிட்டாலோ அல்லது குறைவாகப் பெற்றாலோ அதற்கேற்றாற் போல் துரதிர்ஷ்டமோ அல்லது அவரின் வாழ்நாளில் ஒரு வருடத்தையே இழக்குமாறு அமையுமென சிலர் நம்புகின்றனர்.

Image result for happy vishu images

 

Leave a Reply