விவசாயிங்க..சாவுங்கப்பா..அப்பத்தான்..

கருகிய பயிர்களை கண்டு மனம் தாளாமல் ஒரே நாளில் 5 விவசாயிகள் பலி..அங்கு பலி. இங்கு பலி என தமிழகத்தில் ஏறக்குறைய 60 விவசாயிகள் மாண்டுபோயிருக்கின்றனர்..

தொழில் வளம், வர்த்தகம் ஆகியவற்றின்மீது காட்டப்ப டும் அக்கறையில் பத்தில் ஒரு பங்கு அக்கறை காட்டினாலே போதும்.. இத்தகைய அவலங்களை தவிர்க்க..

நீர் மேலாண்மை என்கிற முக்கியமான விஷயம் இங்கே ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது வெட்கக்கேடான விஷயம்.

குறைந்தபட்சம், மூன்று வேளை நாம் சாப்பிடும் சாப்பாடு செத்துக்கொண்டிருக்கும் விவசாயிகளால்தான் என்பதை நினைத்துக்கூட பார்ப்பத்தில்லை..அவர்கள் பிரச்சினைகளையும் கேட்பதில்லை…அந்த அளவுக்கு நன்றி கெட்டுப்போயுள்ளது நம் புத்தி..

மக்கள் எவ்வழி,, அரசும் அவ்வழி..ஆற்று மணல் கொள்ளை என்கிற பயங்கரம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சுடுகாடாக்கப்போகிறது என்பது ஆட்சி பொறுப்பில் உள்ளவர்களுக்கு உரைக்கவேபோவதில்லை..

விவசாயிகள் படிப்படியாக சாகட்டும்..அப்போதுதான் நன்றி கெட்டவர்களின் பிந்தைய தலைமுறையும் சாப்பிட வழியில்லாமல் பட்டினியால் ஒரேடியடியாக செத்துபோக வழிபிறக்கும்..

ஏனெனில் விவசாயியை தவிர வேறெந்த கொம்பனாலும் ஒரு கைப்பிடி அரிசியை உற்பத்தி செய்யமுடியாது..

ezumalai venkatesan, former news editor media

Leave a Reply