ரூபாய் நோட்டில் பூச்சிகொல்லிமருந்து

ரூபாய்நோட்டுகளில் வாசனைத் திரவியம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தடித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் விநியோகித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் நாடு முழுவதும் ரூபாய் நோட்டுகளுக்குக் கடும்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலைச் சமாளிக்க நீண்டநாட்களாக இருப்பு வைக்கப்பட்டுள்ள நூறு உள்ளிட்ட ரூபாய் நோட்டுகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. வங்கிகளிலிருந்து பெறப்படும் ரூபாய் நோட்டுகளில் துர்நாற்றம் வீசுவதாக டெல்லியில் வாடிக்கையாளர்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய பெயர்குறிப்பிட விரும்பாத வங்கி ஊழியர், இந்த சூழ்நிலையைச் சமாளிப்பதற்காக பல ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் அறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பழமையான ரூபாய் நோட்டுகளை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்புவதாகத் தெரிவித்தார். அந்த நோட்டுகளில் இருந்து வரும் துர்நாற்றத்தைச் சமாளிக்க வாசனைத் திரவியங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை அடித்து வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்க வேண்டிய சூழல் தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதியதலைமுறை

Leave a Reply