ரூபாய் நோட்டில் பிரதமர் உரை

புதிய ரூபாய் நோட்டுகளை ஸ்கேன் செய்தால் பிரதமர் மோடியின் உரையைக் கேட்கும் வகையில் புதிய மொபைல் அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

கருப்புப்பண ஒழிப்பு மற்றும் கள்ளநோட்டுகள் புழக்கத்தைத் தடுப்பதற்காக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி, கடந்த 8ம் தேதி அறிவித்தார். இதையடுத்து பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து மாற்றி வருகின்றனர். இந்தநிலையில் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை ஸ்கேன் செய்தால் நாட்டுமக்களுக்கு பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி ஆற்றிய உரையைக் கேட்கும்வகையில் புதிய ஆண்ட்ராய்டு மொபைல் அப்ளிகேஷனை பெங்களூரு நிறுவனம் உருவாக்கியுள்ளது. மோடி கீ நோட் (Modi keyNote) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மொபைல் அப்ளிகேஷனை கூகுள் ஃப்ளேஸ்டோரில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த மொபைல் ஆப் மூலம் செல்போன் கேமிராவில் புதிய 2,000 ரூபாய் நோட்டில் உள்ள பாதுகாப்பு இழையை ஸ்கேன் செய்தால் பிரதமரின் உரையைக் கேட்கலாம். பர்ரா ஸ்கல் ஸ்டூடியோஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த மொபைல் அப்ளிகேஷன் குறித்த தகவல் சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Leave a Reply