மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு

மனித உடலில் சுமார் 100 ஆண்டுகளாக மறைந்திருந்த புதிய உறுப்பு ஒன்றை அயர்லாந்து நாட்டை சேர்ந்த உடற்கூறு இயல் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார்.  அயர்லாந்து நாட்டில் உள்ள லீமெரிக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இருப்பவர் ஜே.கால்வின் காபி. இவர் மனித உடற்கூறு இயல் ஆய்வினை மேற்கொண்டுள்ளார். இந்த ஆராய்ச்சியின் முடிவில் மனித உடலில் சுமார் 100 ஆண்டுகளாக மறைந்திருக்கும் புதிய உறுப்பு ஒன்றினை கால்வின் கண்டுபிடித்துள்ளார்.

மனித உடலின் குடல் பகுதியை வயிற்றுடன் இணைப்பது மெசன்ட்ரி எனப்படும் நடுமடிப்பாகும். இந்த உறுப்பு பல்வேறு திசுக்கள் ஒன்றிணைந்த ஒரு அமைப்பாகவே கருதப்பட்டு வந்தது. ஆனால் கால்வின் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில் இது தனி உறுப்பு என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்த உறுப்பின் சரியான இயக்கத்தை அறிந்து கொண்டால் நோய் தாக்கத்தை எளிதில் கண்டறியலாம்.

. Mesentery என்றழைக்கப்படும் இந்த உறுப்பு சிறுகுடலில் அமைந்துள்ளது. நம் உடலில் இதன் பணி என்ன என தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள். இந்த புது உறுப்போடு சேர்த்து நம் உடலில் மொத்தம் 79 பாகங்கள் உள்ளன. Gray’s Anatomy புத்தகத்திலும் இந்த புது உடலுறுப்பு குறித்து அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply