போராடுவது வீண்

​*COKE PEPSI* தடை பண்ண சொல்லி போராடுவது வீண்….. முடிந்தவரைம் குடிக்காமல் இருந்தாலே போதும்.
*TASMAC* ஐ தடை செய்ய போராடுவது வீண், முடிந்தவரை நாம் குடிப்பதை நிறுத்திவிட்டாலே போதும்.
*விவசாயிகள்* பிரச்சினை பற்றி போராடுவது வீண். *Super market* ல் காய்கறி வாங்குவதை விட்டு சந்தையில் காய்கறி வாங்கினாலே போதுமானது.
*லஞ்சம்* – வாங்குகிறார்கள் என குறை கூறுவதை விட்டுவிட்டு, லஞ்சம் கொடுக்காமல் இருப்பதே சிறந்தது.
அன்னியநாட்டு பொருட்களை இறக்குமதி செய்யாதே என கூறுவதை விட, நம் சொந்த நாட்டு தயாரிப்புகளை உபயோகித்தாலே போதுமானது.
*PETA* வை -தடை செய்ய போராடுவது வீண் -நம் வீட்டு விலங்கை அக்கறையுடன் பராமரித்தால் எந்த பீட்டாவாலும் ஒன்றும் செய்ய முடியாது.
*அரசியல் வாதி* சரியில்லை என்று கொடிபிடிப்பது வீண்.நாம் எத்தனை பேர் நல்ல குடிமகனாக இருக்கிறோம் என்று சிந்தித்தாலே போதும்.
ஆக எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் ஒவ்வொரு *தனிமனிதனின்* அலட்சியம், சோம்பேரித்தனம்,சுயநலம் மட்டுமே காரணம்…
இவை அனைத்தும் மாறினால் மட்டுமே நம் நாடும் வீடும் செழிக்கும்…
*தனிமனிதனின் மாற்றமே சமூகத்தின் மாற்றம்*
இப்படிக்கு,
*சமூக அக்கறை கொண்ட சாமான்ய தமிழன்

Leave a Reply