போக்குவரத்து இரைச்சல் – ஆபத்தை எதிர்கொள்ளும் பறவைகள்’

பறவைகள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் எச்சரிக்கை ஒலிகளை கேட்பதற்கு வாகன போக்குவரத்தால் உண்டாகும் இரைச்சல் பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், இப்பறவைகள் தங்களை வேட்டையாடுபவர்களால் தாக்கப்படுவதற்கு ஆபத்து அதிக அளவில் உள்ளது என்றும் அவ்விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு பரபரப்பான சாலையில் இருந்த இரண்டு வெவ்வேறு பறவை இனங்களை கொண்டு, அவற்றால் அருகாமையில் உள்ள ஆபத்துக்களை உணர்த்தும் எச்சரிக்கை ஒலிகளை கேட்க முடிகிறதா என்று இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு சோதனையில் விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

ஒலிபெருக்கிகளில் இருந்து கேட்கப்பட்ட வாகன போக்குவரத்து இரைச்சலால் அருகே இருந்த உணவு மேடையில் உணவுள்ளதா என்பதை இப்பறவைகள் கவனிப்பதை தடுக்க முடியவில்லை என்று தெரிவித்த இந்த ஆய்வு, அதே வேளையில் இந்த வாகன போக்குவரத்து ஒலி, இப்பறவைகளை எச்சரிக்கை ஒலிகளை கேட்க முடியாமல் மறைத்து விடுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.இதனால்

1      ஒரு பறவைக்கு மற்ற உயிரினங்களால் ஏற்படும் ஆபத்தினை தெரிவிக்க அருகிலிருக்கும் மற்ற பறவைகளால் முடியாமல் போகும் நிலையில் பறவை இனம் அழிந்துவருவதாகவும் கூறப்படுகிறது.

2        தன் இணைகள் எழுப்பும் ஒலியினை அறிய முடியாத நிலையும் இந்த போக்குவரத்து இரைச்சல் உண்டுபண்ணுகிறது

3          தாயினை பிரிந்த குஞ்சுகள் எழுப்பும் ஒலியினை கூட தாய் பறவை அறிய முடியாத வண்ணம் இந்த இரைச்சல் பறவைகளுக்கு பேராபத்தினை விளைவிக்கிறது.

ஆகையால் மக்களாகிய நாம் தேவையில்லாத இடத்தில் வாகன ஒலிபெருக்கி உண்டாக்காமலும் ஒலிக்க விடும் ஒலியின் அளவினை குறைத்தும் போக்குவரத்து இரைச்சலை தவிர்த்தும் வாழ பழகினால் நம் கண்ணுக்கு புலப்படாலும் நம்மை சுற்றியும் சுற்றித்திரிந்து இயற்கை வளங்களை காக்கும் நம் பறவை இனங்களுக்கு நம்மால் வாழ்வளிக்க முடியும்.

 

 

Leave a Reply