பொறு…பாப்போம்…புலம்பாதே

அய்யோ எனக்கு நாளைக்கு சோத்துக்கு வழியில்லையேங்கிறான் ஒருத்தன், அய்யோ நாளைக்கு எம் புள்ளைக்கு பாலுக்கு வழியில்லையேங்கிறான் இன்னொருத்தன், வண்டிக்கு பெட்ரோல் போடனும் புள்ளைங்க ஸ்கூலுக்குப் போவனும் நா ஆபிசுக்கும் போவனும்ன்னு புலம்புறான் வேறொருத்தன்.( நாளைக்கு மதுக்கடை இருக்காதுன்னு சொன்னா குடிகாரனுக்கு இன்னைக்கே கை கால் நடுங்குற மாதிரி நடுங்குறாய்ங்க சில பேர்).
இந்தக் கம்னாட்டிப்பய மக்களுக்காக பெரும் செல்வந்தரான உ.வ.சி இரட்டை ஆயுள் தண்டைனை பெற்று, செக்கிழுத்து வறுமையில் வாடி செத்துப் போனார்…
சுப்பிரமணிய சிவா சுமார் 8 ஆண்டுகள் சிறையிலடைபட்டு ஆட்டுத் தோலை கொதிக்கும் சுண்ணாம்பில் நனைத்து சுத்தம் செய்யும் தண்டனை பெற்று தொழுநோய் வந்தே செத்துப் போனார்…
தன்னோடஅழகான மனைவியையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு 12 ஆண்டுகள் சிறையில் இருந்தார் நேரு
தன் வாழ்நாளில் 9 ஆண்டுகளை சிறையில் கழித்தார் காமராசர். (40 வயசு வரை சிறையிலயே இருந்துட்டேன் இதுக்குமேல கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணோட வாழ்க்கைய கெடுக்க விரும்பலன்னு பாவம் அந்த மனுசன் கடைசிவரை கல்யாணமே பண்ணிக்கல…)
சுடர்விட வேண்டிய நேரத்தில் அணைந்து போன தீபத்தைப் போல 24 வயதிற்குள் வாழ்க்கை தொடங்கும் நேரத்தில் நாட்டுக்காக தூக்கில் தொங்கி தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்...
இவர்களைப் போன்ற எத்தனையோ கோடி பேர் நாட்டுக்காக தன் தாய், தந்தை, மனைவி, மக்கள், சொத்து, சுகம் எல்லாவற்றையும் தியாகம் செஞ்சு தான் வெள்ளைக்காரனை விரட்டி சுதந்திரம் வாங்குனாங்க. ( பூராம் பொழைக்கத் தெரியாத பயலுவ).
இன்னைக்கு நாம இருக்கிற மாதிரி அவங்களும் சுயநலத்தோட இருந்திருந்தா வெள்ளக்காரன் இன்னும் எத்தன வருசம் வேணும்ன்னாலும் நம்மள ஆண்டு இருக்கலாம். ( உடனே இவய்ங்களுக்கு வெள்ளக்காரய்ங்களே தேவலன்னு சொல்லாதீங்க பஞ்சாப்ல நீங்க குடியிருக்கிற தெருவை முட்டிப் போட்டுத் தான் கடந்து போகனும்னு ஒரு வெள்ளக்காரன் போட்ட உத்தரவு தான் 1500 பேருக்கு மேல குண்டடி பட்டு இறந்துபோன ஜாலியன் வலாபாக் நிகழ்ச்சிக்கான விதை).
# நல்லதோ கெட்டதோ இதுவரை இல்லாத ஒரு புது முயற்சியை எடுக்குது அரசாங்கம். ரெண்டு நாள் தானே பொறுத்துக்குவமே… இதனால கள்ள நோட்டு ஒழியுமா, கறுப்புப் பணம் ஒழியுமான்னு இப்பவே ஆராய்ச்சியோ பட்டிமன்றமோ தேவையில்லாத ஒன்று. இப்போதைக்கு வரவேற்போம். தீமைன்னு உறுதியா தெரிஞ்சா விமர்சிப்போம், எதிர்ப்போம். அதவிட்டுட்டு இதைச் செய்வது மோடிங்கிற ஒரே காரணத்துக்காக குருட்டுப் பூனை விட்டத்துல பாஞ்ச மாதிரி கண்ண மூடிக்கிட்டு எல்லா திட்டங்களையும் எதிர்க்க வேண்டிய அவசியமில்ல…
சிங்கப்பூர் அப்படி இருக்கு, லண்டன் இப்படி இருக்கு, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவெல்லாம் எப்படி எப்படியோ இருக்குன்னு பொலம்புறோம். ஆனா அந்தந்த நாடுகளிலெல்லாம் ஆள்பவர்களுக்கு பொது மக்களின் ஒத்துழைப்பு எப்படி இருக்குன்னு கவனிச்சோம்ன்னா தெரியும் ஏன் அந்த நாடுகள் எல்லாம் முன்னேறி இருக்குன்னு புரியும். அரசு + மக்கள் இணையும் போது தான் எந்த திட்டமும் வெற்றி பெறும். திட்டங்கள் வெற்றி பெற்றால் தான் நாடு வளர்ச்சியடையும். இரு கைகள் இணைந்தால் தான் ஓசை வரும். ஒரு கையிலயும் ஓசை வரும் ஆனா கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும். வலி பொறுப்போம். வலிமை பெறுவோம்….

முகநூலில் இருந்து

Leave a Reply