பொய் பேசுவதை கண்டறியும் வழி

உலகில் மனிதர்களாக பிறந்த யாராலும் பொய் சொல்லாமல் இருக்கவே முடியாது. ஏதோ ஒரு சந்தர்பத்திற்காக பொய் கூறும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

அந்த வகையில் ஒருவர் பொய் பேசுகிறாரா என்பதை அவரது முக பாவனை, உடல்மொழி, மற்றும் கண் அசைவுகளை வைத்து நாம் சாதரணமாக கண்டறிந்துவிடலாம்.

ஆனால் இது குறித்து ஆராய்ச்சிகள் செய்த போது, ஒருவரது மூக்கை வைத்து, அவர் பொய் சொல்கிறார்களா? அல்லது இல்லையா? என்பதை மிகவும் எளிமையாக தெரிந்துக் கொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கிரானாடா பல்கலைகழகத்தின் உளவியல் துறையினர்கள், பொய் சொல்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது என்று நடத்திய ஆய்வில், பொய் சொல்பவர்களின் மூக்கு புடைக்கும் என்பதை கண்டுபிடித்துள்ளார்.

பொய் பேசும் போது நமது உடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் மூளையின் அடிப்படைக் கூறாக கருதப்படும் இன்சுலாவின் செயல்பாடு ஆகியவற்றில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். எனவே இந்த மாற்றங்களின் வெளிப்பாட்டினால், நம்முடைய மூக்கு புடைக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மேலும் இந்த ஆய்வின் போது, பொய் சொல்பவர்களின், மூக்கு அதிகமாக புடைக்கச் செய்து, கண்ணில் இருக்கும் தசைகள் எழுச்சி அடைகின்றன. எனவே இந்த மாற்றத்திற்கு, ஆய்வாளர்கள் பின்னாக்கி எஃபெக்ட் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

நமது உடலின், உணர்வுகளால் ஏற்படும் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களை கண்டறியும் தெர்மோகிராபி என்ற சோதனை முறையை பயன்படுத்தி நடத்திய ஆய்வின் போது, பொய் சொல்லுபவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் வெளிப்பட்டது.

இதன் மூலம், உண்மையை மறைத்து ஒருவர் பொய் கூறும் போதும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களின் மனதில் அதிகரிப்பதால், அவருடைய இயல்பு நிலை மாறி இன்சுலா தாறுமாறாக செயல்படுவதால், மூக்கு புடைப்புகள் அதிகமாக ஏற்படுகிறது என்று இந்த ஆய்வின் மூலம் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

Leave a Reply