பிரபலங்களின் பிரபலமான கனவுகள்

​#பிரபலங்களின்_பிரபலமான_கனவுகள்…
#ஆர்_கே
அன்று இரவு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த லிங்கன்  அழுகுரல்  கேட்டு பாதியில் எழுந்து விட  தொடர்ந்து அழகுரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது….
எங்கிருந்து வருகிறது இந்த அழுகுரல் ..யாருக்கு என்ன ஆச்சு  என்ற பதட்டத்துடன் ஒவ்வொரு அறைகளையும் நோட்டம் விட  அறைகள் முழுவதும் காலி யாரும்  இல்லை…..
தொடர்ந்து  அழுகுரல் விடாமல் கேட்டுகொண்டே இருக்க மாடியில் இருந்து கிழே இறங்கியவருக்கு அதிர்ச்சி ….ஒரு பெரும் கூட்டம் அந்த கூட்டத்தில் தனது  பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் நண்பர்கள்  அழுதுகொண்டிருக்கிறார்கள்…..
அருகில் மனைவி உட்பட ……
நடுவே மிக அழகாக அலங்கரிக்கபட்ட நிலையில் ஒரு சவப்பெட்டி…
யார்  அந்த சவப்பட்டியில் என்பதை அறிய நெருங்கியவருக்கு பேரதிர்ச்சி..அது லிங்கன் ..
என்ன ஆச்சு எனக்கு என்று பதற்றத்தில் எழுந்தவருக்கு பிறகு தான் இது கனவு என தெரிந்தது….
மறுநாள் கனவு பற்றி மனைவிடம் விவரிக்கிறார்……
மீண்டும் அதே கனவு..அடுத்தடுத்து மூன்று நாட்கள் அதே காட்சிகளுடன்…
மீண்டும் இந்த கனவு  பற்றி தன் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ள….
ஒன்றிரண்டு நாட்கள் வெளியில் செல்வதை தவிர்க  பாதுகாப்பு அதிகாரிகள்  அறிவுறுத்துகின்றனர்….
இன்று மனைவியை  நாடகம் பார்க்க அழைத்து  செல்லவிருப்பதால் நாளை யோசிக்கிறேன் என்று செல்லிவிட்டு கிளம்பும் லிங்கன் தன் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ….. குட் பை சொல்ல லேசான அதிர்ச்சி  அவர்களுக்கு……
காரணம் …..இரவு நேரங்களில் லிங்கன் எப்போதுமே  குட்நைட் சொல்லிய பழக்கமானவர் ….இன்று அவரிடம் இருந்து வித்தியாசமாக ….குட் பை…..
மனைவியுடன் நாடகத்தை பார்க்க சென்ற லிங்கன் …..
கடைசியாக அந்த தியேட்டரிலே ஒரு மர்ம நபரால்  சுடபட்டு மரணத்தை தழூவினார்….
அமெரிக்க வரலாற்றிலே முதன்முதலில் சுடப்பட்டு இறந்த முதல் அதிபர்….ஆபிரஹாம் லிங்கன்தான்…

Leave a Reply