மிரண்டது காளை; அரண்டது போலீஸ்  

 மதுரை: பாலமேட்டில் கோவிலுக்கு அழைத்து வரப்பட்ட காளைகள் மிரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுப்ரீம் கோர்ட் தடை காரணமாக மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டுக்கு காளைகளை விட வேண்டாம் என உரிமையாளர்களிடம் போலீசார் அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில், அங்கு உள்ளூர் மக்கள் குவிந்தனர். மேலும், வெளியூரிலிருந்து வந்த ஆயிரகணக்கான மக்களும் குவிந்திருந்தனர். ஜல்லிக்கட்டுக்கு தடையை கண்டித்து பாலமேட்டில் கடைகளில் கருப்பு கொடி கட்டப்பட்டு, முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பீட்டாவை தடை செய்ய வலியுறுத்தினர்.

பின்னர் காளை உரிமையாளர்கள் கோவிலுக்கு காளைகளை பூஜைக்கு அழைத்து வந்தனர். பின்னர் திருப்பி அழைத்து செல்லும் போது காளைகள் திடீரென மிரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், செய்வதறியாது திகைத்த போலீசார் கூட்டத்தினரை கட்டுப்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்.பி., தலைமையில் ஆயிரகணக்கான மக்களும் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வாடிவாசல் முன்பு ஆயிரகணக்கான பொது மக்கள் போராட்டம் நடத்தினர். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

dinamalar

Leave a Reply