பள்ளிகளில் பிரதமர் படம் கட்டாயம்

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடியின் படங்களை வைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த 7 ம் தேதி அரசு பிறப்பித்த உத்தரவு: மாநிலத்தில் உள்ள பல அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் படங்கள் இடம்பெறவில்லை. இதனால், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் படங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில பள்ளி கல்வி அமைச்சர் தீபக் ஜோஷி கூறுகையில், தலைவர்களின் படங்கள் கட்டாயம் வைக்க வேண்டும். இதன் மூலம் அவர்களின் பணி மற்றும் உழைப்பை மாணவர்களுக்கு கற்று தர முடியும். இதனால், அரசு அலுவலகங்கள் மற்றும் கட்டடங்களில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி படங்கள் வைப்பதில் எந்த விதிமீறலும் இல்லை எனக்கூறினார்.

Leave a Reply