நான் இருக்கும்வரை நீ இருக்கவேண்டும்”

நான் இருக்கும்வரை நீ இருக்கவேண்டும்” – சோவிடம் உறுதி வாங்கிய ஜெயலலிதா

பிரபல பத்திர்க்கை ஆசிரியர் சோ இன்று அதிகாலை மரணமடைந்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெருங்கிய நண்பராகவும் அரசியல் ஆலோசகராகவும் திகழ்ந்த சோ ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டிருந்த போது அவரை பார்க்க ஜெயலலிதா சென்றிருந்தார்.

மிகவும் மோசமான நிலையில் இருந்த சோவை பார்த்த ஜெயலலிதா நான் இருக்கும்வரை நீயும் இருக்கவேண்டும் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

அதற்கு சோவும் நானும் அவசரப்பட்டு போய் விடமாட்டேன் என்று பதிலுக்கு நகைச்சுவையாக தெரிவித்தார்.

இன்று சோவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த திரைப்பட தயாரிப்பாளர் AVM சரவணன் இந்த சம்பவத்தை குறித்து செய்தியாளர்களிடம் குறிப்பிட்ட பின் முதலமைச்சரின் மறைவுக்காக சோ இதுவரை காத்திருந்தாரோ என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

vikadan

Leave a Reply