நாட்டிலேயே பெரிய வெல்லம் மார்க்கெட்

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் நாட்டிலேயே இரண்டாவது பெரிய வெல்லம் மார்க்கெட்டாக கருதப்படும் அனகாபள்ளி மார்க்கெட் மூடப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய வெல்லம் மார்க்கெட்டாக விசாகப்பட்டினம் அருகிலுள்ள அனகாபள்ளி மார்க்கெட் கருதப்படுகிறது.விவசாயிகளின் போராட்டம் நடைபெற்ற நாட்களைத் தவிர வேறு எந்த நாட்களிலும் இந்த மார்க்கெட் மூடப்பட்டதில்லை.இந்நிலையில் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பணப் பற்றாக்குறை காரணமாக இந்த மார்க்கெட்டை மூடுவதாக அனகாபள்ளி மார்க்கெட் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.நாட்டில் பணப்புழக்கம் சீராகும் வகை இந்த கடையடைப்பு தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

”வெல்லம் கொண்டு வரும் லாரிகளுக்கு சரக்குக் கட்டணத்தில் பாதியை நாங்கள் முன்னரே கொடுத்திருக்க வேண்டும்.ஆனால் ஒரு வாரத்திற்கு 24,000 மட்டுமே வங்கியிலிருந்து பெற முடியும் என்ற நிலை உள்ளது.சூழ்நிலைக்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்கு வெல்லத்தை டெலிவரி செய்ய ஆட்டோ,ரிக்‌ஷா போன்றவற்றை பயன்படுத்தினாலும்,அவற்றுக்கு வாடகை கொடுக்க எங்களிடம் பணம் இல்லை

.வாங்கிய சரக்குகளுக்கான பணத்தை ஒன்பது நாட்களுக்குள் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும்.இல்லையென்றால் அடுத்த நாள் அவர்களுக்கு வட்டியுடன் தொகை செலுத்த வேண்டும்.”என அனகாபள்ளி மார்க்கெட் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் வேறு வழியின்றி மார்க்கெட்டை மூட வேண்டிய சூழலுக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.இதனால் அனகாபள்ளி மார்க்கெட்டை சார்ந்திருந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

Leave a Reply