நள்ளிரவு பூஜை

திருவல்லிக்கேனியில் அமைந்துள்ள பார்த்தசாரதி கோயிலில் நள்ளிரவில் விதிகளை மீறி ஜெயலலிதாவுக்காக பூஜை நடத்தப்பட்ட காட்சிகள் புகைப்படமாக வெளியாகியுள்ளது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வளாகம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் நேற்று முன்தினம் இரவு மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது. அதிகாலை சுமார் 1 மணியளவில் TN 04-AM 5 என்ற எண் கொண்ட லேன்சர் கார், TN20-CU2277 என்ற எண் கொண்ட காரும் கோயில் முன் வந்து நின்றது.

அதிலிருந்து, சில மன்னார்குடி முக்கிய பிரமுகர்களும் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடரும் அடைத்து வைக்கப்பட்டிருந்த கோயிலின் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளனர்.

ஜெயலலிதா நலமடைந்தால் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு பூஜை நடத்துவதாக சசிகலா நடராஜன் வேண்டிக்கொண்டார். அந்த வேண்டுதலை நிறைவேற்றவும் காணிக்கைகள் செலுத்தவும்தான் சசிகலாவுக்கு வேண்டிய பிரமுகர்கள் நள்ளிரவில் திருவல்லிகேணி கோவிலுக்கு சென்றுள்ளனர்.

கோயிலின் வாசலில் கார் நிற்பதும், நபர்கள் கோயிலுக்குள் செல்வதுமான புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து, விதிமுறைகளை மீறி கோயிலுக்குள் நுழைந்துள்ளனர் என்று சர்ச்சை வெடித்துள்ளது.

ulkuththu

Leave a Reply