திருவண்ணாமலை மகா தீபம்

திருவண்ணாமலையில் 30-ல் தீபத் திருவிழா தொடக்கம் டிச. 12-ம் தேதி அதிகாலை பரணி தீபம்; மாலையில் மகா தீபம் ஏற்றப்படும்

திருவண்ணாமலையில் 30-ல் தீபத் திருவிழா தொடக்கம்
டிச. 12-ம் தேதி அதிகாலை பரணி தீபம்;
மாலையில் மகா தீபம் ஏற்றப்படும் |
தமிழகம் முழுவதும் இருந்து 2.400 சிறப்பு பேருந்துகள் இயக்கம் |
பஞ்சபூத தலங்களில் அக்னி தலம் என்று அழைக்கப்படும் திரு வண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நவம்பர் 30-ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது. டிசம்பர் 12-ம் தேதி அதிகாலை பரணி தீபமும் மாலையில் மகா தீபமும் ஏற்றப் படுகிறது. இது குறித்து கோயில் நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:
நவம்பர் 30-ம் தேதி தீபத்திருவிழா காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் மாட வீதி வர உள்ளார். அதனைத் தொடர்ந்து டிசம்பர் 1-ம் தேதி சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் உற்சவம்,
வெள்ளி மூஷீக வாகனத்தில் விநாயகர் உற்சவம், டிசம்பர் 2-ம் தேதி நடைபெற உள் ளது.
டிசம்பர் 3-ம் தேதி காலை 7.15 மணிக்கு மேல் 8.30 மணிக் குள் தங்கக் கொடிமரத்தில் கொடி யேற்றம் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து
8-ம் தேதி முற்பகலில் 63 நாயன்மார்கள் மாட வீதியுலா நடைபெறவுள்ளது. மகா தேரோட் டம் டிசம்பர் 9-ம் தேதி நடைபெற வுள்ளது.
முதலில், விநாயகர் தேரோட்டம் காலை 6.05 – 7.05 மணிக்குள் புறப்படுகிறது. பின்னர் வள்ளி தெய்வானை சமேத முருகன், உண்ணாமுலை சமேத அண்ணாமலையார், பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறும். ஒவ்வொரு தேரும் நிலைக்கு வந்த பிறகு, மற்றொரு தேர் புறப்படும்.
காலை 6.30 மணியளவில் தொடங்கும், மகா தேரோட்டம் நள்ளிரவு நடைபெறும். அண்ணாமலையார் கோயிலில் டிசம்பர் 12-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படு கிறது. பின்னர், அன்று மாலை 5 மணியளவில் தீப தரிசன மண்ட பத்தில் அர்த்தநாரீஸ்வரர் காட்சி கொடுக்கிறார்.
அதனைத் தொடர்நது 2,668 உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இதையடுத்து, 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறும். மேலும், வெள்ளி மூஷிக வாகனத் தில் விநாயகர் மற்றும் வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் டிசம்பர் 16-ம் தேதி மாட வீதியுலா வந்ததும், கார்த்திகை தீபத் திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவையொட்டி 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். தமிழகம் முழுவ திலும் இருந்து திருவண்ணா மலைக்கு 2,400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

Leave a Reply