தர்மபுரியில் செய்தி தாள்களுக்கு தடை..!

மாவட்ட ஆட்சியர் திடீர் உத்தரவு..!

தர்மபுரி மாவட்டத்தில் ஓட்டல்களில் செய்திதாள்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிளாஸ்டிக் கவர் மற்றும் செய்திதாள்களை ஓட்டல்களில் பயன்படுத்துகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலம் பாதிக்கப்படுகின்றது.

எனவே டீக்கடைகள் மற்றும் ஓட்டல்களில் செய்திதாள்களை யாரும் பயன்படுத்தக்கூடாது அப்படி மீறி யாராவது பயன்படுத்தினால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

By கலியுக பாரதி anniyans

Leave a Reply