தமிழக அரசை தாக்கும் கொசு பிரச்சனை

கொசுவை ஒழித்தீர்களா? தமிழக அரசை விளாசிய உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் கொசுக்களை ஒழிப்பது தொடர்பாக நீதிமன்றம் விதித்த உத்தரவின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை, இது தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொசு ஒழிப்பு நடவடிக்கையை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழகத்தில் கொசுக்களை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில் அளிக்க தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

vikatan

Leave a Reply