தண்ணீருக்காக பன்னீர்- பயணம் வெற்றி

தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்., ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழகத்திற்கு 2. 5 டி.எம்.சி., தண்ணீர் தர ஆந்திரா சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
தெலுங்கு கங்கை திட்டத்தின்படி சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை இன்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இது வரை யாரும் எடுக்காத முயற்சியாக முதல் முறையாக ஆந்திராவுக்கு நேரில் சென்று ஓ.பி.எஸ்., நடத்திய பேச்சுக்கு ஒரு நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. குடிநீர் தேவை பற்றி விவாதிப்பதற்காகவும், தெலுங்கு கங்கை திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் ஆந்திர தலைநகர் அமராவதிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஜனவரி 12) காலை மூத்த அமைச்சர்களுடன் சென்றார் . அங்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவர் சந்தித்துப் பேசினார் .

Leave a Reply