‘தங்க’ பீட்சா

ஆரோக்கியம் குறித்த கவலையை ஏற்படுத்தினாலும், பலரும் விரும்பி உண்ணும் வித்தியாசமான உணவாக இருக்கிறது, பீட்சா.

குறிப்பாக இளையோர், பீட்சாவை பெரிதும் விரும்புகின்றனர்.

சைவம், அசைவம் என இரு வகைகளிலும் கிடைக்கும் பீட்சா, விதவிதமாக தயாரிக்கப்பட்டு மக்களை மயக்குகிறது.

பீட்சாவின் புது வகைகளில் தற்போது ‘தங்க’ பீட்சாவும் இடம்பிடித் திருக்கிறது. அதுவும் 24 கேரட் தங்கத்தில் தயாரிக்கப்பட்ட பீட்சா.

தங்க பீட்சாவை ருசிக்க வேண்டும் என்றால் நீங்கள் அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள ‘இண்டஸ்ட்ரி பீட்சா’ கடைக்குச் செல்ல வேண்டும்.

அங்குதான், தங்கத் துகள்கள் தூவப்பட்ட பீட்சாவை ருசிக்கலாம்.

பிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட் களால் தயாரிக்கப்படும் இந்த பீட்சா ஒன்றின் விலை ஒரு லட்ச ரூபாய்க்கு மேல்! ஒரு துண்டு மட்டுமே 17 ஆயிரம் ரூபாய்.

இரண்டு நாட்களுக்கு முன்பே ஆர்டர் செய்தால்தான் ‘தங்க’ பீட்சா கிடைக்குமாம்.

பீட்சா பிரியர்கள் அமெரிக்கா செல்லும்போது, ‘தங்க’ பீட்சாவை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

daily thanthi

Leave a Reply