டொனால்ட் ட்ரம்பின் வாழ்க்கை வரலாறு!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் பற்றிய சில முக்கியத் தகவல்கள்.

உலக அளவில் புகழ்பெற்ற அமெரிக்க சண்டை நிகழ்ச்சியில் (WWE) கலந்து கொண்டவர் தான் இன்று அமெரிக்க அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கும் டொனால்ட் ட்ரம்ப்.

அரசு ஆட்சி நிர்வாகத்தில் இது வரை எந்த பதவியையும் வகிக்காமல் அதிபராக வந்துள்ள முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள குயின்ஸ் பகுதியில் 1947ம் ஆண்டு கட்டுமான நிறுவனம் நடத்தி வந்த பெட்ரிக், மேரி மெக்லியாட் ஆகிய இருவருக்கும் மகனாக பிறந்த டொனால்ட் ட்ரம்ப் தனது சிற வயது முதலே அதீத உற்சாகமான குழந்தையாகவே வளர்ந்தார்.

ட்ரம்பின் உற்சாகத்தை முறைப்படுத்த எண்ணிய அவரது பெற்றோர்கள் அவரை 13 வயதில் ராணுவ பள்ளியில் சேர்ந்தனர். பள்ளியில் சிறந்த விளையாட்டு வீரராக விளங்கிய ட்ரம்ப், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் பட்டப்படிப்பை முடித்தார்.

பட்டப்படிப்பிற்கு பின்னர் தந்தையுடன் கட்டுமான தொழிலில் இறங்கிய ட்ரம்ப் அதிரடியான முடிவுகளின் மூலம் தொழிலின் முன்னோடியாக வலம்வந்தார். 1971ம் ஆண்டு தன் தந்தையின் நிறுவனத்தின் முழு அதிகாரத்தையும் எடுத்துக் கொண்ட ட்ரம்ப், எலிசபத் ட்ரம்ப் அன்ட் கோ என்ற பெயரை ட்ரம்ப் ஆர்கனைசேஷன் என்று மாற்றினார்.

1980ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள தி கிராண்ட் ஹாயாட் ஹோட்டலை புதிப்பித்ததன் மூலம் தனது தொழிலின் முன்னோடி என்ற இடத்தை பிடித்தார். அப்போது அவரின் ஆர்ட் ஆப் டீல் என்ற புத்தகம் உலகமுழுவதும் பெறும் வரவேற்பை பெற்றது.

1999ம் ஆண்டு தனது அரசியல் பயனத்தை தொடங்கிய ட்ரம்ப், ரிஃபார்ம் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் முதல் சுற்றில் அதிக வாக்குகள் பெறாததால் போட்டியிலிருந்து பின் வாங்கினார். இதை தொடர்ந்து ட்ரம்ப் ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் தயாரிக்க தொடங்கினார்.

என்.பி.சி தொலைகாட்சி நடத்திய தி அப்ரிசியேஷன் என்ற நிகழ்ச்சி உலகளவில் பெரிய வெற்றி பெற்றது. வெற்றிகரமான தொழிலதிபாராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் அறியப்பட்ட ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பிறப்பை பற்றி சந்தேகத்தை எழுப்பினார்.

அதை தொடர்ந்து குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக முன் மொழியப்பட்டார். அதை தொடர்ந்து நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக முடி சூடி உள்ளார் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply