டிரம்பின் மீது கூறிய புகார்கள்

 

74 வயதான ஜெசிகா லீட்ஸ் என்ற பெண், ‘‘எனக்கு 38 வயது இருக்கும் போது நியூயார்க் நகருக்கு விமானத்தில் பயணம் செய்தேன். எனக்கு பக்கத்து சீட்டில் இருந்த டிரம்ப் என்னை மெதுவாக தொட்டார். நான் பொறுமையாக இருக்கவே அவரது கைகள் எல்லா இடத்துக்கு சென்றது. அது ஒரு செக்ஸ் தாக்குதல்’’ என கூறினார்.

ரேச்சல் குரூக்ஸ் என்ற பெண், ‘‘எனது 22 வயதில், டிரம்புக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் கம்பெனியில் வரவேற்பாளராக வேலை பார்த்தேன். அப்போது ஒரு நாள் லிப்ட்டில் இருந்து வெளியே வரும் போது டிரம்ப் என் உதடுகளில் முத்தமிட்டார். நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன்’’ என்று கூறினார். இதே போல், நடாஷா, மிண்டி மெக்கில்லிவ்ரே என பல பெண்கள் டிரம்ப் மீது செக்ஸ் புகார்களை கூறியுள்ளனர். இதையடுத்து, டிரம்ப்புக்கு எதிர்ப்பு வலுவடைந்தது. இந்நிலையில், புளோரிடாவில் நேற்று பிரசாரம் செய்த டிரம்ப், ‘‘ஹிலாரியும், மீடியாவும் சேர்ந்து எனக்கு எதிராக சதி செய்து இந்த புகார்களை கூற வைத்துள்ளனர். அத்தனை புகார்களும் முழுக்க, முழுக்க பொய்யானவை’’ என்று கூறியுள்ளார்.

இத்தனை புகார்களும் மீறி இன்று டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
tamilmurasu

Leave a Reply