ஜெயலலிதா உடல் நிலை: ‘எக்மோ’

ஜெயலலிதா உடல் நிலை கவலைக்கிடமாகியுள்ள நிலையில் அவர் ‘எக்ஸ்ட்ராகார்ப்போரியல் மெம்ப்ரேன் ஆக்ஸிஜெனேஷன்’ (ECMO) என்ற இருதய மற்றும் மூச்சு உதவி அமைப்புடன் இருந்து வருவதாக செய்திகள் வந்துள்ளன.

எக்மோ பற்றி சில குறிப்புகள்:

மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளிகள் சிலருக்கு பயன்படுத்தப்படும் உயிர்காக்கும் கருவியே எக்மோ. வழக்கமாக மாரடைப்பு ஏற்பட்டால் இருதயத்தை இயங்கச்செய்ய செயற்கை சுவாச உதவியுடன் மார்பை அமுக்கி இயங்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்த மரபு மருத்துவ சிகிச்சைக்கு பலன் இல்லையெனில் எக்மோ உயிர்காக்கும் கருவி பயனளிக்கும்.

நரம்பிலிருந்து ரத்தத்தை பிரித்தெடுத்து அதில் பிராணவாயுவைச் சேர்த்து கார்பன் டை ஆக்சைடை நீக்கும் பணியை எக்மோ கருவி செய்யும். மேலும் ரத்தத்தை லேசாக உஷ்ணமாக்கி ரத்தக்குழாய்க்கு அனுப்பும் சில சந்தர்ப்பங்களில் ரத்தத்தை உடலுக்கு பம்ப் செய்து அனுப்பும் வேலையையும் செய்வதாகும். இதனால் இருதயம் மற்றும் நுரையீரலை ரத்தம் பைபாஸ் செய்ய முடிகிறது.

குறிப்பாக மாரடைப்பு ஏற்பட்ட நோயாளியை கவனிக்கும் அந்த குறிப்பிட்ட மருத்துவர் அல்லது மருத்துவக் குழு மாரடைப்பு எதனால் ஏற்பட்டது என்று கருதுகினரோ அதனை எக்மோ மூலம் மாற்றியமைக்க முடியும் என்றும் பழைய நிலைமைக்கு இருதயத்தை திருப்ப முடியும் என்று நினைக்கும்பட்சத்தில் எக்மோ முறையை அவசரமாகப் பயன்படுத்துவார்கள்.

Leave a Reply