ஜெயலலிதாவின் சமாதிக்குள் விழுந்த செல்போன்

ஜெயலலிதாவின் சமாதிக்குள் தம்முடைய செல்போன் விழுந்துவிட்டதாக பாஜகவின் ஆசீர்வாதம் ஆச்சாரி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஜெ.வின் பூத உடல் அடங்கிய சந்தனப்பேழை குழிக்குள் இறக்கப்பட்டது. அப்போது விஐபிக்கள் சந்தனக் கட்டைகளை அந்த குழியில் போட்டு அஞ்சலி செலுத்தினர். சசிகலாவின் கணவர் நடராஜனுடன் இருந்த பாஜகவின் ஆசீர்வாதம் ஆச்சாரியும் சந்தனக் கட்டைகளை உள்ளே போட்டுக் கொண்டிருந்தார். திடீரென அவரது கையில் இருந்த செல்போனும் சந்தனப்பேழை இறக்கப்பட்ட குழியில் விழுந்துவிட்டது. இச்செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் “அம்மாவின் சமாதிக்குள் என் போன்” என ஜூவி செய்தியை சுட்டிக்காட்டி பதிவு செய்திருக்கிறார் ஆசீர்வாதம் ஆச்சாரி.

Leave a Reply