சீன குரங்கு

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தான் வெற்றி பெறுவார் என சீனக்குரங்கின் கணிப்பும் உண்மையாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளின்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிட்டனர். இருவரில் யார் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதை சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஷியான் ஏரி நிர்வாகத்துக்குச் சொந்தமான குரங்கு மூலம் கடந்த
சில தினங்களுக்கு முன் கணிக்கப்பட்டது.

இதற்காக இரு வேட்பாளர்களின் உருவ பொம்மைகளுக்கு மத்தியில் அமர வைக்கப்பட்ட குரங்கு, நில நிமிட யோசனைக்குப் பின் டொனால்ட் ட்ரம்பின் உருவ பொம்மைக்கு முத்தமிட்டது. இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில் ட்ரம்ப் வெற்றி பெற்றதால், சீனக் குரங்கின் கணிப்பு உண்மையாகியுள்ளது.

Leave a Reply