கியூபா சிங்கம் மறைந்தது..!

அமெரிக்காவின் சிம்ம சொப்பனம். அமெரிக்க வரலாற்றில் யாரையாவது பார்த்து அவர்கள் பயந்து பின் வாங்கினார்கள் என்றால் அது கியூபா-பிடல்காஸ்ட்ரோ- சே குவேரா..! இந்த மூன்று விஷயங்களுக்கு மட்டும் தான்…!

அமெரிக்க படைகள் கால் இடற, பின் வாங்கி ஓடியது என்றாலும் அதுவும் இந்த மூன்று விஷயங்களுக்குத் தான்..!

இந்த மாவீரனை வரலாறு கொஞ்சம் வேறு மாதிரி சொல்கிறது. நிஜத்தில் காஸ்ட்ரோ இளகிய மனம் கொண்டவர் என்கிறார்கள்.

போர் வீரர்களுக்கு உணவு தாமதம் ஆனால் கூட கண் கலங்கி விடும் கருணையுள்ளம் கொண்டவர்..!

அதே போல ஒருவரைப் பிடித்துவிட்டது என்றால் உடனடியாக நண்பன் என்கிற அந்தஸ்து கொடுத்துவிடுவார்…அது கடைசி போர் வீரானாக இருந்தால் கூட..!

அப்படிதான் காஸ்ட்ரோ-சேகுவேரா நட்பும்..! தினமும் சேகுவேராவைப் பார்த்தால் தான் காஸ்ட்ரோவிற்கு நிம்மதி..!

சே.பொலிவியா செல்ல ஆயத்தமானர். கலங்கி விட்டார் காஸ்ட்ரோ..! “போகத்தான் வேண்டுமா சே.. என மனதுக்கு உன்னை இம்முறை அனுப்ப பயமாக இருக்கிறது..’என்று கண் கலங்க..சிரித்தது சே குவேரா எனும் வேங்கை.

எனக்கு பொலிவியா மக்களை நினைத்தால் அதைவிட பயம் வருகிறது மாஸ்டர்..நான் என்ன செய்வது..மரணம் எப்போதும் உறதியான ஒன்றுதானே..என்று கூறி காஸ்ட்ரோவுடன் மூன்று நாட்கள் காஸ்ட்ரோவுடன் தங்கியுள்ளார் சே குவேரா அதன் பின்தான் பொலிவியா பயணம் மேற்கொண்டார்..!

பயந்தது போலவே போல சேவை கொன்றது அமெரிக்க ஏஜென்ட்..! கலங்கிப் போனார் காஸ்ட்ரோ. நிலைகுலைந்து அரற்றிக் கொண்டே இருந்திருக்கிறார்..!

அக்டோபர் 18…. கியூபா… ஹவானா-வில் வரலாறு காணாத கூட்டம் ‘சே’வின் அஞ்சலிக்காக காஸ்ட்ரோவின் தலைமையில் கூடியிருந்தது.

அவர்கள் முன் தலைமை உரையாற்றுகிறார் காஸ்ட்ரோ. ”வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்றுவிட்ட ‘சே’ நம் காலத்தின் ஒப்பற்ற தலைவர். கியூபா மக்கள் அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும்” என வேண்டுகோள் விடுக்கிறார்.

ஒரு தலைவன் போராளியை தலைவன் என்று அழைத்தது வரலாற்று பெருமை

Leave a Reply