எருமையின் விலை ரூ.9.25 கோடி

தினமும் 20 லிட்டர் பால். ஆப்பிள் உட்பட 10 கிலோ பழங்கள் உணவு. 5 கி.மீ. நடைபயிற்சி. இப்படி இருக்கிறது ‘யுவராஜின்’ வாழ்க்கை. ஆமாம் ஹரியாணாவைச் சேர்ந்த கரம்வீர் சிங் வளர்க்கும் எருதுதான் யுவராஜ். இதன் மதிப்பு இப் போது ரூ.9.25 கோடிக்கு மேல் உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள தீன்தயாள் வளாகத்தில் ‘கிராமோதயா மேளா’வுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய் துள்ளது. இந்தப் பகுதி உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச மாநில எல்லையில் உள்ளது. இங்கு நடக்கும் உழவர் சந்தைக்கு வந்த ஒரு எருது அனைவரையும் கவர்ந்தது. அதன் பெயர் யுவராஜ்.

யுவராஜுக்கு வயது 9, எடை 15 குவிண்டால் (150 கிலோ), 11.5 அடி நீளம், 5.8 அடி உயரம். மிகவும் வீரியமிக்கதாக யுவராஜ் உள்ளதால் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேச மாநில மக்களைப் பெரிதும் கவர்ந் துள்ளது. இதை ரூ.9.25 கோடிக்கு வாங்கவும் சிலர் முன்வந்துள் ளனர். ஆனால், யுவராஜை விற்க மறுத்துள்ளார் அதன் உரிமையாளர் கரம்வீர் சிங்.

ஹரியாணா மாநிலம் குருஷேத்ராவைச் சேர்ந்த கரம்வீர் சிங், யுவராஜ் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

யுவராஜ் எங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போன்றது. குழந்தையைப் போல அதை வளர்த்து வருகிறேன். யுவராஜ் விலை மதிப்பற்றது. யுவராஜின் தீனிக்காக தினமும் ரூ.3000 முதல் ரூ.4000 வரை செலவிடுகிறேன். யுவராஜிடமிருந்து ஒரு முறை 10 முதல் 14 மி.லி. வரை விந்து எடுக்கப்படுகிறது. அதை அறிவியல்பூர்வமாக நீர்க்க செய்து 700 முதல் 900 ‘டோஸ்’கள் வரை மாற்றப்படுகிறது.

அதை சினைக்காக பயன்படுத்த வழங்குகிறேன். ஒரு டோஸை ரூ.500-க்கு என்னால் விற்க முடியும். ஆனால், சமூக சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் குறைந்த விலைக்கே யுவராஜின் விந்துவை விற்கிறேன்.

யுவராஜ் மூலம் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக ரூ.50 லட்சம் வரை சம்பாதிக்கிறேன். அந்தப் பணம் என் குடும்பத் தினர் வைத்துள்ள மற்ற கால் நடைகளை ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவுகிறது. அதே சமயம், யுவராஜை நல்ல விதமாக பராமரிக்க ஏராளமாக செலவிடுகிறேன்.

இவ்வாறு கரம்வீர் சிங் கூறினார்.

the hindu

Leave a Reply