உலகில் இப்படி ஒரு வள்ளலா?

ஒட்டு மொத்த கிராம மக்களையும் கோடீஸ்வரராக்கிய செல்வந்தர்

ஸ்பெயின் நாட்டில் உள்ள பெரும் செல்வந்தர் ஒருவர் தாம் பிறந்த கிராம மக்கள் அனைவருக்கும் தலா 2 மில்லியன் பவுண்டு தொகையை தானமாக வழங்கி அசத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் குட்டி கிராமம் Cerezales del Condado. இங்கு பிறந்து வளர்ந்தவர்தான் உலகப் புகழ் பெற்ற Corona மதுபான ஆலையின் உரிமையாளர் Antonino Fernández.

இவர் தாம் இறக்கும் முன்னர் எழுதி வைத்த உயிலின் படி தாம் பிறந்த கிராம மக்கள் அனைவருக்கும் தலா 2 மில்லியன் பவுண்டு (இலங்கை மதிப்பில் ரூ.36,98,694,06) தொகையை தானமாக வழங்கியுள்ளார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஆண்டனினோ 1949 ஆம் ஆண்டு மெக்சிகோ நாட்டில் குடிபெயர்ந்தார். அங்கு அவர் தனது உறவினரின் புகழ்பெற்ற Grupo Modelo என்ற மதுபான ஆலையில் இணைந்து பணியாற்றினார்.

அங்கு அவர் தனது அயராத முயற்சியாலும் கடின உழைப்பாலும் தலைசிறந்த நிர்வாகி என பெயர் எடுத்தது மட்டுமின்றி, குறித்த நிறுவனத்தில் இருந்து உலகப்புகழ்பெற்ற மதுபான வகைகளையும் வெளியி பிரசித்தி பெற்றார்.

ஆதரவற்றவர்களுக்கும் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் எப்போதும் ஆதரவளித்து வந்துள்ள Antonino கடந்த ஆகஸ்ட் மாத தமது 99-வது வயதில் மரணமடைந்தார்.

தாம் பிறந்த கிராமத்தில் உள்ள மக்கள் செழிப்புடன் வாழவேண்டும் என கருதிய அவர் இறப்பதற்கு முன்னர் எழுதிய உயிலில் தமது சொத்தில் இருந்து கிராம மக்கள் அனைவருக்கும் குறித்த தொகையை பங்கிட்டு வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தார். அதன்படி தற்போது குறித்த தொகையை அந்த கிராம மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply