ஈஷா மையம் ஆக்கிரமித்த 44 ஏக்கர் பஞ்சமி நிலம்

ஈஷா மையம் ஆக்கிரமித்த 44 ஏக்கர் பஞ்சமி நிலம் – மலைவாழ் போராட்டம்; ஒப்படைப்பதாக உறுதி

பழங்குடி மற்றும் தலித் மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய 44 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ஈஷா யோகா மையம் அபகரித்ததை கண்டித்து மலைவாழ் மக்கள் மற்றும் தலித் மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து திரும்ப ஒப்படைப்பதாக அதிகரிகள் உறுதியளித்தனர்.

கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு அருகே உள்ள முள்ளாங்காடு என்ற இடத்தில் அரசின் உபரி நிலம் 44 ஏக்கர் உள்ளது. இதனை, 1992 ம் ஆண்டு 46 பேருக்கு அந்த நிலம் ஒப்படைக்கப்பட்டது.

பழங்குடியின மற்றும் பட்டியல் மக்களுக்கு ஒப்படைப்பு செய்யப்பட்ட அந்த 44 ஏக்கர் நிலத்தை, இந்நிலையில், ஈஷா யோகா மையம் ஆக்கிரமித்து மின் வேலி அமைத்து கட்டிடங்கள் கட்டி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், 44 ஏக்கர் நிலத்தை தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கக்கோரி, நில மீட்பு இயக்கத்திற்கு மலைவாழ் மக்கள் சங்கம், விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆதித்தமிழர் கட்சி மற்றும் சமூக நீதி கட்சிகளின் போராட்டக்குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, ஆவேச பேரணியாக முட்டத்துவயல் நிலத்திற்கு கிளம்பினர். போராட்டக்காரர்கள் காவல் துறையினரின் தடுப்புகளை மீறி, பிரச்சனைக்குரிய இடத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் குடியேறும் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து போராட்டக் குழுவினருடன் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி, வட்டாட்சியர் மோகன் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மலைவாழ் மக்கள் மற்றும் போராட்ட குழுவினரின் தொடர் போராட்டத்தால், அரசு நிர்வாகம் போராட்ட தலைவர்களுடன் மூன்று மணிநேர பேச்சுவார்த்தை நடத்தி குறுகிய கால அவகாசத்திற்குள் நிலத்தை பகிர்ந்தளிப்போம் என ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த போராட்டத்திற்கு பிறகு நிர்வாகம் பணிந்தது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட செய்தி ஒட்டுமொத்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave a Reply