இவருடைய சொத்துக்கு முன்னாடி பில்கேட்ஸ் எல்லாம் ஒன்னுமே இல்ல..!

இவருடைய சொத்துக்கு முன்னாடி பில்கேட்ஸ் எல்லாம் ஒன்னுமே இல்ல..!
?????????????
உலகளவில் பெரும் பணக்காரர் என்றால் நம்மில் பலருக்கும் நினைவில் வரும் முதல் நபர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் சீஇஓவான பில் கேட்ஸ் தான்.
ஆனால் வரலாற்றைத் திருப்பிப் பார்க்கும்போது பலரின் சொத்து மதிப்புகள் பில் கேட்ஸை விடவும் பல மடங்கு அதிகமாக இருந்துள்ளது என்பது தான் உண்மை.
பில்கேட்ஸ்-ஐ விடவும் அதிகச் சொத்துக்களை வைத்திருந்தவர்கள் யார் யார்?

ஹெஷென்
அதிக வளம் கொண்டு ஒரு அரசு சம்ராஜ்யத்தின் அரசர் என்றால் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நபர் ஹெஷென். 1750ஆம் வருடம் பிறந்தார் ஹெஷென், இவர் Qing சம்ராஜ்யத்தின் தலைவர் ஆவார்.
1799ஆம் ஆண்டு இவர் இறக்கும் போது இவரது மொத்த சொத்தின் இன்றைய மதிப்பு 132 பில்லியன் டாலர்.

..

பில் கேட்ஸ்

2000ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கிய பில் கேட்ஸ் அதிகப்படியாக 144 பில்லியன் டாலர் அளவிலான சொத்துக்களை வைத்திருந்தார்.

..
வில்லியம் டி வரேன்னே
11ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபராக இருந்த வில்லியம் டி வரேன்னே ஆங்கிலம் பேசும் சுமார் 13 நாடுகளில் சொத்துக்களை வைத்திருந்தார். பல்வேறு ஊர்களில் ஆடம்பர அரண்மனைகளையும் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1086ஆம் ஆண்டின் அரசு தகவல்களின் படி, இன்று வில்லியம் டி வரேன்னே அவர்களின் சொத்து மதிப்பு 146 பில்லியன் டாலராக இருந்திருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

..

ஜான் ஜேக்கப் ஆஸ்டர்
அமெரிக்காவின் முதல் மில்லியனர் என்று பெயர் வாங்கியவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
ஜான் ஜேக்கப் ஆஸ்டர் ஒரு ஜெர்மன் நாட்டு வியாபாரி இவர் அப்போதைய காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கிய உரோம ஆடைகள் மற்றும் பொருட்களை அதிகளவில் தயாரித்து விற்பனை செய்தார்.
இதன் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவில் பெரிய அளவிலான வர்த்தகச் சந்தையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் ஜான் ஜேக்கப் ஆஸ்டர். இன்றைய மதிப்பில் இவரது சொத்து மதிப்பு 136 பில்லியன் டாலராகக் கணக்கிடப்படுகிறது.

..

அலன் ரூபெஸ்
ரிச்மண்ட்-இன் முதல் பிரபுவாக இருந்த அலன் ரூபெஸ் 1093ஆம் ஆண்டு இறக்கும் போது சுமார் 11,000 யூரோ மதிப்பிலான சொத்துக்களை வைத்திருந்தார். இந்தத் தொகையை அக்காலகட்டத்தில் இங்கிலாந்து நாட்டின் மொத்த ஜிடிபியில் 11 சதவீதம் என்றால் கணக்கிட்டுப் பாருங்கள்.
இன்றைய மதிப்பில் இவரது சொத்து மதிப்பு 195 பில்லியன் டாலராக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.


ஹென்றி போர்ட்
கார் தயாரிப்பு மற்றும் ஆட்டோமொபைல் உலகையே மாற்றி அமைத்த ஹென்றி போர்ட் 1947ஆம் ஆண்டு இறந்தார். இவர் இறக்கும்போது அவரின் சொத்துக்களின் இன்றைய மதிப்பு 200 பில்லியன் டாலர்.


கார்நீலியஸ் வான்டர்பிலிட்
1794ஆம் ஆண்டுப் பிறந்த கார்நீலியஸ் வான்டர்பிலிட் ஏழையாக இருந்து தனது காலத்திற்கு உள்ளேயே மிகப்பெரிய பணக்காரர் ஆனார். இவர் தனது சொத்துக்களை ரயில் திட்டம், கப்பல் வழித்தடம், போக்குவரத்து ஆகிய துறையில் இருந்து பெற்றார்.
இவரது சொத்து மதிப்பு இன்றைய நாளில் 202 பில்லியன் டாலராக இருந்திருக்கும்.


முயம்மர் கடாபி
முயம்மர் கடாபியின் மரணம் நாம் யாரும் மறந்திருக்க முடியாது. இவர் தனது வாழ்க்கையை மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்தார். ஆனால் மரணம் மற்றும் அதற்கு முந்தைய பதுங்கு குழி வாழ்க்கை இவர் வாழ்வியல் முறைக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.
2011ஆம் ஆண்டு இவரது சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர் எனக் கணக்கிடப்பட்ட நிலையில் 2016ஆம் ஆண்டில் பணவீக்கும் ஆகியவற்றைக் கணக்கிட்டு இவரது சொத்து மதிப்பு 212 பில்லியன் டாலராக இருக்கும் எனத் தெரிகிறது.

..

வில்லியம்
இங்கிலாந்து நாட்டின் முதல் நார்மன் அரசராக வில்லியம் இருந்துள்ளார். 1066ஆம் ஆண்டு இந்நாட்டிற்குப் படையெடுத்து நாட்டைக் கைப்பற்றினார்.
இன்றைய மதிப்பில் இவரது சொத்து மதிப்பு 228 பில்லியன் டாலராக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஜேக்கப் ஃபூகர்
ஐரோப்பாவின் மகிப்பெரிய பணக்காரர் மட்டும் அல்லாமல் வங்கியியர், வியாபாரி, சுரங்க துறையில் முன்னோடி எனப் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரரான ஜேக்கப் ஃபூகர்-இன் இன்றைய சொத்து மதிப்பு 277 பில்லியன் டாலராக இருந்திருக்கும்.

..
ஓஸ்மான் அலி கான்
ஹைதராபாத் நகரின் கடைசி அரசரான ஓஸ்மான் அலி கான் 1911 முதல் 1948 வரையில் ஆட்சி செய்தார்.
20ஆம் நூற்றாண்டில் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் இவரும் ஒருவர். ஓஸ்மான் அலி கான்-இன் 40வயதில் இவருடைய சொத்துமதிப்பு 2 பில்லியன் டாலர். இன்றைய மதிப்பில் இது 230 பில்லியன் டாலராக இருக்கும் என அறியப்படுகிறது.

..

டிசார் நிக்கோலஸ் 2
நிக்கோலஸ் ரோமனாப் ரஷ்யாவை ஆண்டுக்கொண்டு இருக்கும்போது டிசார் நிக்கோலஸ் 2 அரசு கஜானாவை இயக்கும் உரிமையைப் பெற்றார். இன்று முதல் இவரது சொத்து மதிப்பு பல மடங்க உயர்ந்தது.
1916ஆம் ஆண்டின் இவரது சொத்து மதிப்பை ஆய்வு செய்யும் போது இன்றைய மதிப்பில் இவரது மொத்த சொத்து மதிப்பு 300 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.


ஆண்ட்ரூ கார்னகி
அமெரிக்க ஸ்டீல் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தைப் புதிய வடிவத்திற்கும் அதில் ஆதிக்கம் செலுத்திய மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவர் ஆண்ட்ரூ கார்னகி
இவரது கடைசிக் காலத்தில் இவரது மொத்த சொத்து மதிப்பில் 90 சதவீதத்தை நன்கொடையாகக் கொடுத்தார். இன்றைய நிலையில் இவரது மொத்த சொத்து மதிப்பு 337 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்திருக்கும்.

..

ஜான் டி.ராக்பெல்லார்
1870ஆம் ஆண்டு ஸ்டாண்டர்டு எண்ணெய் நிறுவனத்தை உருவாக்கிய ஜான் டி.ராக்பெல்லார் அமெரிக்காவின் 90 சதவீத எண்ணெய் வர்த்தகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
இவருடைய இன்றைய சொத்து மதிப்பு 367 பில்லியன் டாலராக இருக்கும்.

..

மான்சா முசா 1
மிலன் சாம்ராஜ்யத்தின் தலைவரான மான்சா முசா 1 ஆட்சியில் இருக்கும் போது உலகில் விநியோகம் ஆகும் 50 சதவீத தங்கம் இந்நாட்டில் இருந்து சென்றது. இதனால் இவரது சொத்து மதிப்பு குறுகிய காலகட்டத்திலேயே பெரிய அளவிலான உயர்வை அடைந்தது.
இன்றைய நிலையில் இவரது சொத்து மதிப்பு 415 பில்லியன் டாலராக இருந்திருக்கும்.

..
சாலமன்
970பிசி முதல் 931 பிசி வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த சாலமன் என்னும் அரசர், தனது 39 வருட ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் 25 டன் தங்கத்தைப் பெற்றார்.
இதனால் இவரது சொத்து மதிப்பு இன்றைய நாளில் கணக்கிடும்போதும் சுமார் 2 டிரில்லியனை தாண்டுகிறது.

ஆகஸ்டஸ் சீசர்
ரோமன் சாம்ராஜ்யத்தின் முதல் அரசராக இருந்தவர் ஆகஸ்டஸ் சீசர், இவரது ஆட்சிக் காலத்தில் சாம்ராஜ்யத்தின் மொத்த பொருளாதாரத்தில் 20 சதவீதம் இவருடையதாக இருந்தது.
ஆக இவரது சொத்து மதிப்பு இன்றைய தினத்திற்குக் கணக்கிடும்போது சுமார் 4.63 டிரில்லியன் டாலராக இருந்திருக்கும்.


அக்பர் 1
பாரதத்தில் முகலாயச் சாம்ராஜ்யத்தில் அக்பரை நாம் எப்போதும் மறக்க முடியாது. இவரது ஆட்சியில் பல ஆடம்பர மாளிகை கட்டி மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்தார்.
இன்றைய நாளில் இவரது மொத்த சொத்து மதிப்பு 21 டிரில்லியன் ஆகக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஷென்சாங்
1067-1085 வரையிலான காலத்தில் சீனாவை கட்டியாண்ட ஷென்சாங் சீனாவின் 30 சதவீத ஜிடிபி அளவிற்குத் தனது சொத்துக்களை வைத்திருந்தார்.
இன்றைய நிலையில் இவரது மொத்த சொத்து மதிப்பு 30 டிரில்லியன் டாலரைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது.

..

செங்கிஸ் கான்
மங்கோல் நாட்டு அரசான செங்கிஸ் கான் 1206ஆம் ஆண்டுகளில் சுமார் 12 மில்லியன் சதுரமீட்டர் அளவு கொண்ட நிலத்தை ஆண்டதாகக் கூறப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல் இவர் மொத்த ஐரோப்பாவையும், ஆசியாவையும் ஆண்டதாகக் கூறப்படுகிறது.
அதனால் இவரது இன்றைய சொத்து மதிப்பை முழுமையாகவும் சரியாகவும் கணக்கிடப்பட முடியவில்லை, ஆனால் கண்டிப்பாக 100 டிரில்லியன் டாலரைத் தாண்டி இருக்கும் என்பது நிச்சயம்.

Leave a Reply