இதுக்குமாய்யா.. ஆப்.

தெரியாத இடத்தில் அவசரமா?

டாய்லெட் இடத்தை காட்டும் புது ஆப்.

புதுடெல்லி: பொதுவாக புதிய இடத்துக்கு போகும்போது திடீரென உடல் உபாதை ஏற்பட்டால் டாய்லெட் தேடி அலையும் கஷ்டம் மிகவும் கொடுமையானது. இதற்கு தீர்வு அளிக்கும் வகையில் `டாய்லெட் லோகேடர்’ என்ற அப்ளிகேஷனை மத்திய அரசு நேற்று அறிமுகம் செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக `டாய்லெட் லோகேடர்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து `டாய்லெட் லோகேடர்’ ஆப்பை உருவாக்கியுள்ளது. இந்த ஆப்பில் மூலம் நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகரங்களில் பொதுமக்கள் தாங்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள கழிப்பறை பகுதிகளை தெரிந்து கொள்ளலாம். இந்த ஆப்பில் அரசு நடத்தி வரும் கழிப்பறை அல்லது ரெஸ்ட் ரூம்கள் மட்டுமல்ல டாய்லெட் உள்ள ரயில் நிலையங்கள், மால்கள், பெட்ரோல் பங்குகள், மருத்துவமனை பகுதிகளுக்கும் வழி காட்டும்.

இந்த ஆப்ைப பயன்படுத்த முதலில் கூகுள் மேப்பை ஒப்பன் செய்ய வேண்டும். பின்பு, அருகில் உள்ள டாய்லெட் என்று டைப் செய்தால் உடனே கூகுள் நீங்கள் இருக்கும் பகுதிக்கு அருகே உள்ள கழிப்பறை இடத்தை சுட்டிக்காட்டும். டாய்லெட், லாவாடோரி, சுவாச் போன்ற வார்த்தைகளை டைப் செய்தாலும் கழிப்பறை இடத்தை காட்டும்.

Leave a Reply