அரக்கோணம்

வேலூர் மாவட்டம் #அரக்கோணம் பற்றி சிறு வரலாற்று தகவல்…
1. முற்காலத்தில் #அறுகோணம் என்று அழைக்க‍ப்பட்டு வந்த இப்பெயர் 

நாளடைவில் #அரக்கோணம் என்று ஆகி விட்ட‍து.
2. அரக்கோணத்தை ஏ.ஜே.ஜே. (AJJ) 

என்று இரயில்வேத் துறையினர் குறிப்பிடுகின்றனர். அதன் விள க்க‍ம் #அரக்கோணம்_ஜாயினிங்_ஜங்ஷன் #Arakkonam_Joining_Junction என்பதாகும்.
3. வேலூர் மாவட்ட‍த்திலேயே, (சில சமயம் தமிழகத்திலேயே) கோடை காலத்தின்போது அதிக வெப்ப‍ம் பதிவாகும் இடமாகவும், மழைக்காலத்தில் அதிக மழை பொழியும் இடமாகவும் அரக்கோணம் இருந்து வருகிறது.
4. அதிகமாக மழை பொழியும் காலத்தில் தண்ணீர் ஓடும் ஆறு கள், இரண்டு சென்னை மார்க் க‍மாக குஸஸ்தலை ஆறும், காஞ்சிபுரம் மார்க்க‍மாக கல்லாறு எனும் ஆறும் அரக்கோணம் அரு கில் உள்ள‍ ஆறுகள் ஆகும்.

 

5. அரக்கோணம் நகராட்சி 1958 ஆம் ஆண்டு வரையில் ஊராட்சி மன்றமாக இருந்து மூன்றாம் நிலை நகராட்சியாக மாறியது. 1983 ஆம் ஆண்டில் இரண்டாம் நிலை நகரமாக மாற்ற‍ப்பட்ட‍து. 1984 ஆம் ஆண்டு முதல் முத ல்நிலை நகராட்சியாக செயல்படுகிறது.
6. நெமிலி, சம்பத்துராயன்பேட்டை, பனப்பாக்க‍ம், மின்ன‍ல், குருவ ராஜ்பேட்டை ஆகிய இட ங்களில் கைத்தறி மற்றும் விசைத்தறி யால் புடவை, வேட்டி, லுங்கிகளை பெருமளவில் உறபத்தி செய்து, விலை மலிவாக தருகிறார்கள்.
7. தெற்கு ஆசியாவிலேயே இரண்டாவது இடமா கவும், இந்தியாவி லேயே முதலாவதாகவும் மிக நீளமான ஓடு பாதை (ரன்வே) கொ ண்ட கடற்படை விமானத் தளம் ஐ.என்.எஸ். இராஜாளி அரக்கோ ணத்தில் அமைந்திருக்கிறது.
8. தமிழகத்தில் தெற்கு இரயில்வே தொடங்கப்பட்டு இராயப்புரத்தி லிருந்து அரக்கோணம் வழியாக வாலாஜா ரயில் நிலையம் வரை இருப்புப் பாதை அமைக்க‍ப்பட்டு, முதன்முதலாக ரயில் வண்டி இயக்க‍ப்பட்ட‍ பெருமை இப்ப‍குதி க்கு மட்டுமே உண்டு.
9. அரக்கோணம் நகரின் உட்புறம் உள்ள‍ போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், திருத்த‍ணி சாலையிலிருந்து திருவள்ளூர் சாலைக்கு ஹவுசிங் போர்டு மற்றும் பெரிய ஏரி வழியாக 80 அடி அகல வழி சாலை அமைக்க‍ உத்தேசிக்க‍ப்பட்டுள்ள‍து.
10. அரக்கோணத்தில் செயல்படும் இந்தியன் ரயில்வே இன்ஸ்டியூட் டில் பில்லியர்ஸ், கேரம், டேபிள் டென்னிஸ், கிரிக்கெட், வெயிட் லிஃப்டிங் போன்ற விளையாட்டுக் கள், அதற்கான பயிற்சிகள் முறை யாக கொடுக்க‍ப்பட்டும் வருகின்ற ன• இங்கு பயிற்சி பெற்ற‍ விளை யாட்டு வீரர்கள் மாவட்ட‍, மாநில தேசிய அளவில் விளையாடி சாத னை படைக்கிறார்கள்.
      #வரலாற்று_தேடலில்_கிடைத்தவை.

Leave a Reply