மங்களகரமான தோட்டத்துக்கு மஞ்சள் பூக்கள்

பூக்கள் என்று கூறியதும் அனைவருக்கும் நினைவில் வருவது சிவப்பு நிற பூக்கள் தான். ஆனால், அவற்றை விட மஞ்சள் நிறப் பூக்கள் பார்க்க மிகவும் அழகாகவும், மங்களகரத்துடனும் காட்சியளிக்கும். மேலும் மஞ்சள் நிறம் மூளைக்கும், கண்களுக்கும் மிகவும் சிறந்தது எனறு நம் முன்னோர்கள் சொல்வார்கள். இப்போது அத்தகைய மஞ்சள் நிறத்தில் உள்ள பூக்களுள் சிலவற்றை என்னவென்று பார்த்து, தோட்டத்தில் வைத்து மகிழலாமா!!!

சூரியகாந்தி (Sunflower):

இந்தப் பூவின் சிறப்பு என்னவென்றால், இது சூரியனை நோக்கியே இருக்கும். அதாவது காலையில் கிழக்கு திசையிலும், மாலையில் மேற்கு திசையை நோக்கியும் காணப்படும். இந்த செடி நீரை நன்கு உறிஞ்சும் மண்ணில் வளரும். மேலும் இது வளர்வதற்கு அதிகமான சூரிய வெளிச்சம் தேவைப்படும்

பேரரளி (Daffodils):

அரளிப் பூவில் மஞ்சள் நிறத்தில் காணப்படும் அரளிக்கு தான் பேரரளி என்று பெயர். இது பார்க்க மிகவும் அழகாக இருக்கும். பொதுவாக நிறைய செடிகள் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளால் அழிந்துவிடும். ஆனால் இந்த செடியை விலங்குகள் சாப்பிடாது. மேலும் இதற்கு போதிய சூரிய வெளிச்சம் மற்றும் நல்ல தரமான மண் இருந்தால், நன்கு வளரும்.

சாமந்தி (Yellow Marigold):

தோட்டத்திற்கு அழகு தருவதில் முதன்மையான பூச்செடி என்றால் அது சாமந்தி தான். இந்த செடி நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இந்த செடிக்கு போதுமான சூரிய வெளிச்சமும், தண்ணீரும் இருந்தால் நன்கு செழிப்பாக வளரும்.

பான்சி (Pansy):

தோட்டதில் வளர்க்கும் மஞ்சள் நிறப்பூக்களில் பான்சியும் ஒன்று. இது பல வகையில் உள்ளது. அதன் வகைக்கு ஏற்ப சிலசமயங்களில் இதற்கு அதிகமான சூரிய வெளிச்சமும், இல்லையெனில் ஒரு நாளைக்கு ஒருசில மணிநேரம் மட்டும் இருந்தாலே போதுமானது. இந்த வகையான செடிக்கு நல்ல ஈரத்தை உறிஞ்சும் மற்றும் உரமிடப்பட்ட மண்ணில் நன்கு வளரும்.

மஞ்சள் அல்லி (Asiatic Lily):

வீட்டில் உள்ள தோட்டத்தில் வளர்க்கும் பூச்செடிகளில் மஞ்சள் நிற அல்லியும் ஒன்று. இது நன்கு வளர்வதற்கு அளவுக்கு அதிகமான சூரிய வெளிச்சமும், நல்ல உரமிடப்பட்டுள்ள மண்ணும் வேண்டும். மேலும் இதற்கு ஊரளவு தண்ணீர் இருந்தாலே போதுமானது. இதனை தோட்டத்தில் வளர்த்தால், வீடு மற்றும் தோட்டம் நன்கு மணத்துடன் இருக்கும்.

மஞ்சள் ரோஜா (Yellow Rose):

காதலின் சின்னமாக இருக்கும் ரோஜாவில் பல நிறங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் மஞ்சள் நிற ரோஜா மிகவும் அழகாக இருப்பதோடு, தோட்டத்திற்கும் ஒருவித அழகைத் தருகிறது. இந்த ரோஜா செடிகள் நன்கு நீரை உறிஞ்சும் மண்ணிலும், போதுமான சூரிய வெளிச்சத்திலும் வளரும்.

ஆகவே மேற்கூறிய மஞ்சள் நிறப்பூக்களையெல்லாம் வீட்டுத் தோட்டத்தில் வைத்து, சந்தோஷத்துடன் மகிழுங்கள். மேலும் வேறு எந்த மிஞ்சள் நிறப்பூக்களை வைத்தால் நன்றாக இருக்கும் என்று உங்களுக்குத்ம தோன்றினால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

tamil.boldsky.com

Leave a Reply